சிங்கப்பூரில் நோய் பரவல் காரணமாக தற்போது இரண்டாம் கட்ட உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடைமுறைக்கு திரும்ப தாங்கள் தயாராக இருப்பதாக திரையரங்க நிறுவனங்கள் தற்பொழுது கூறியுள்ளன.
இருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் மீண்டும் நடப்புக்கு வந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் கட்டுப்பாடு நடைமுறைகள் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டதற்கான காரணங்களை தங்களால் புரிந்து கொள்ள முடிவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மே 16 முதல் ஜூன் 21 வரை நடமாட்ட கட்டுப்பாடு அமலில் இருந்தபோது திரையரங்குகளில் உணவு பானம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு இருந்தது, ஆனால் அது மீண்டும் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திரையரங்குகளில் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.