TamilSaaga

உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை சிங்கப்பூரில் வேணுமா? அப்போ இந்த” 5 (Rule) “வழிகளை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க…!!!

ஆசியாவின் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு தனி இடம் உண்டு. ஆம், சிங்கப்பூர் நாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு, ஓர் வளர்ச்சி அடைந்த நாடாக மிளிர்கிறது. பல்வேறு துறைகளில், அந்நாடு புதியதொரு அத்தியாயத்தை தொடங்கி கொண்டிருக்கிறது. இதன் பலனாக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது. சிங்கப்பூர் அரசும் வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கான அனைத்து வசதிகளையும் மற்றும் தகவல்களையும் தெளிவாகவும், சுலபமாகவும் ஆக்கியிருக்கிறது.

ஏன் மற்ற ஆசிய நாடுகளை விட சிங்கப்பூருக்கு ஏராளமானோர் வேலைக்கு செல்ல விரும்புகின்றனர்? மற்ற வாழ்ந்த நாடுகளை கணக்கில் இடுகையில் சிங்கப்பூரில் குறைந்த அளவே காஸ்ட் ஆஃப் லிவிங் உள்ளது. மேலும் இது பாதுகாப்பான நாடக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை காட்டிலும் அங்கு வேலை வாய்ப்புகள் பல்வேறு துறைகளிலும் அதிகரித்துள்ளது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் வெளிநாட்டு தொழிலாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. இதனால் சிங்கப்பூரில் வேலை செய்வது பலருக்கு கனவாகவும், எட்டா கனியாகவும் இருக்கிறது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலைக்கு மட்டுமின்றி சிலர் குடும்பத்துடன் சிங்கப்பூரில் தங்கி PR வாங்கவும் விரும்புகின்றனர். இவை அனைத்தும் சாத்தியமே, அதற்கு நீங்கள் தேவையான தகவல்களை பெற்று அதன்படி நடந்தால் தாங்களும் சிங்கப்பூரில் குடியேறலாம். சிங்கப்பூரில் வேலை வாங்குவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அந்த காலகட்டத்தில் சிங்கப்பூரில் வேலை தேடுவது சிரமமாக இருந்திருக்கலாம் தற்போது இந்த டிஜிட்டல் காலகட்டத்தில் வீட்டிலிருந்து உங்கள் தகுதிக்கு தேவையான வேலையை வாங்க முடியும்.

இந்த பதிவு, சிங்கப்பூரில் வேலை தேடுவதற்காக, தேடுதல் முறையை விளக்குவதாகும். இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் சில குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் எளிதில் சிங்கப்பூரில் வேலையை வாங்க முடியும். முதலில் உங்களுடைய கல்வி தகுதியை அறிந்து அதற்குண்டான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். துறையை தேர்ந்தெடுத்த பின் என்னென்ன நிறுவனங்கள் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். இது உங்களுக்கு அடிப்படை விஷயமாக கருதப்படுகிறது. முக்கிய குறிப்புகள் இதோ,

முதலில், சிங்கப்பூரில் பின்பற்றப்படும் பொதுவான வேலை நடைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வேலை நடைமுறைகளை தெரிந்து கொள்ள நீங்கள் சிங்கப்பூர் அரசின் MOM என்ற இணையதளத்தை பார்க்கவும். இதில் விவரமாக என்னென்ன வேலைகளுக்கு என்னென்ன நடைமுறைகள் பின்பற்றுகின்றனர் என்பது போன்ற விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு உரிய துறையில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு, அவை உங்களுக்கு ஏற்றதாய் இருந்தால் நீங்கள் வேலை தேடுவதற்கான அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்.

எந்தெந்த வழிகளில் வேலை தேடலாம் அல்லது எவை மூலமாக வேலை கிடைக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

  1. ஆன்லைன் மூலம் வேலை தேடலாம்.
  2. வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலை தேடலாம்.
  3. சிங்கப்பூரின் முக்கிய குழுக்களின் மூலம் வேலை தேடலாம்.

ஆன்லைன் மூலம் வேலை தேடுவதற்கு நிறைய இணையதளங்கள் கொட்டி கிடைக்கின்றன அதில் நீங்கள் சரியானதை தேர்ந்தெடுத்து, அதில் உங்களுடைய சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம். அதில் உலகளாவிய வேலை தேடும் இளையதளங்களும் இருக்கிறது அதேபோல் குறிப்பாக சிங்கப்பூர் சென்று வேலை தேடும் இணையதளங்களும் இருக்கின்றன. இவை இரண்டிலும் உங்களுடைய சுயவிவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சில முக்கியமான இணையதளங்கள் இதோ, Monster, LinkedIn, Indeed Singapore, MyCareersFuture. இதில் Monster மற்றும் LinkedIn உலகளாவிய இணையதளங்கள். இந்த நெட்வொர்க் மூலம் நீங்கள் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை பெறுவது மற்றும் வேலை தேடுவது என்பதை சுலபமாக செய்ய முடியும். அடுத்தது சிங்கப்பூர் சென்று இருக்கும் Indeed Singapore, MyCareersFuture ஆகியவை சிங்கப்பூரில் என்னென்ன மாதிரி வேலை வாய்ப்புகள் தற்போது இருக்கிறது என்பதை காட்டும்.

அடுத்தது, ஆன்லைன் மூலம் வேலை தேடுதல் ஒரு பெரும் பங்கு வகித்தாலும். நேரடியாக வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் வேலை தேடுவதும் உங்களுக்கு கைகொடுக்கும். இப்படி நேரடியாக வேலை வாய்ப்பு நிறுவனங்களை அணுகும் போது, உங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. சிங்கப்பூரில் இது போன்ற நிறைய வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் சரியான வேலை வாய்ப்பு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். மிகவும் பிரபலமான துறை சார்ந்த வேலை வாய்ப்பு நிறுவனங்களை பார்க்கலாம்.

Manpower நிறுவனம், தகவல் தொழில்நுட்பம் வாடிக்கையாளர் சேவை, பொறியியல் துறை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடுபவர்கள் காண சிறந்த நிறுவனமாகும். 3C Synergy நிறுவனம் குறிப்பாக ஆயில் மற்றும் கட்டுமானத்துறைகளில் வேலை தேடுபவர்கள் இது ஒரு சிறந்த இடமாகும். மேலும் உற்பத்தி துறைகளில் சூழல், கட்டிட சேவைகள் போன்ற துறைகளில் இந்த நிறுவனம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். Randstad நிறுவனம் UI/UX வடிவமைப்பு, ஃபைனான்ஸ், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு இந்த நிறுவனம் உதவியாக இருக்கும். இது போன்ற நிறுவனங்களில் நீங்கள் நேரடியாக சென்று விசாரித்து பின் உங்களுடைய நம்பகத்தன்மையை பெருமானின் நீங்கள் உங்களுடைய சேவையை பெறலாம்.

வேலை தேடுபவர்களுக்கு, பிரபல நிறுவனத்தின் மற்றும் நிறுவனத்தினர் உடைய நெட்வொர்க் மிகவும் அவசியம். ஏனென்றால் அவர்களுடைய தொடர்பின் மூலம் உங்களுக்கு வேலை கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடுபவர் என்றால் சிங்கப்பூரில் உள்ள முக்கிய குழுக்கள் தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் பங்கு பெறலாம். உதாரணத்திற்கு Startup Grind Singapore, Meetup போன்ற குழுக்கள் உங்களுடைய நெட்வொர்க்கை வலுப்படுத்தும். அது மட்டுமின்றி நீங்கள் தன்னார்வ சேவைகளை செய்யலாம் இதன் மூலமும் உங்களுடைய காண்டாக்ட் பெரும். சிங்கப்பூர் அரசே இது போன்ற தன்னார்வ சேவைகளுக்கு இணையதளம் வைத்து செயல்படுகிறது. இதில் பங்கு பெற்று தன்னார்வ சேவையில் பங்கு பெறலாம்.

சரி உங்களுக்கு வேலை கிடைத்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியவை ஒர்க் விசா (work visa) விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஒர்க் விசா ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு துறைக்கும், நீங்கள் வகிக்கும் பதவிக்கும் வேறுபடும். இது பற்றி தெளிவான விவரங்கள் MOM இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். இந்த பதிவில் சுருக்கமாக சில ஒர்க் விசா பற்றி பார்க்கலாம்.

நீங்கள் தொழிலாளர்கள் வகையில் வேலை செய்ய வருகிறீர்கள் என்றால், S Pass, Work Permit for migrant worker மற்றும் Work Permit for performing artiste விசாக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். ஒருவேளை நீங்கள், ப்ரொபஷனல் ஒர்க்கர் பிரிவில் சிங்கப்பூருக்கு வருகிறீர்கள் என்றால் Employment Pass, Overseas Networks & Expertise Pass, Personalized Employment Pass போன்றவை உள்ளன. நீங்கள் படிப்பதற்காக அல்லது பயிற்சி பெறுவதற்காக சிங்கப்பூருக்கு வருகிறீர்கள் என்றால், Training Employment Pass, Training Work Permit, Work Holiday Pass போன்ற பாஸ்கள் உதவியாக இருக்கும்.

இதுபோன்ற ஒர்க் பாஸ்களை, நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறையும் பாஸ்பெரும் முறையும் மிகவும் எளிமையாக்கி இருக்கிறது சிங்கப்பூர் அரசு. எனவே இன்னும் என்ன தயக்கம், சிங்கப்பூரில் வேலை வாங்கலாம் வாங்க!!

Related posts