TamilSaaga

நாம எப்பவுமே “கெத்து” தான்! சிங்கப்பூரின் விஸ்தாரா விமானத்தின் கடைசி பயணம் – கண்ணீரோட விடைகொடுத்த “கேப்டன்”!

நவம்பர் 11, 2024 அன்று விஸ்தாரா விமானத்தின் கடைசி பயணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது. கேப்டன் சுதான்ஷு ரைக்வார் மற்றும் முதல் அதிகாரி நேகல் ஆகியோரின் கண்கலங்கிய பிரியாவிடை உரை அனைவரையும் நெகிழ வைத்தது.

கேப்டன் சுதான்ஷு ரைக்வாரின் உரை

“மதிப்பிற்குரிய பயணிகளே, விஸ்தாரா பிராண்டின் கடைசி சேவைக்கு வரவேற்கிறோம். கடந்த ஆண்டுகளில் உங்களுக்கு சேவை செய்தது பெரும் கௌரவம். இனி ஏர் இந்தியா குடும்பத்தில் இணைந்து சிறந்த பாதுகாப்பு மற்றும் சேவையை வழங்க காத்திருக்கிறோம்”.

முதல் அதிகாரி நேகலின் உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள்

“இன்று கலவையான உணர்வுகளுடன் விஸ்தாராவின் கடைசி பயணத்தை மேற்கொள்கிறோம். பல பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியமான தருணம். விஸ்தாரா எண்ணற்ற பயணிகளை கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களை தாண்டி இணைத்துள்ளது. இந்த நினைவுகளை என்றும் சுமந்து செல்வோம்
நாட்டின் மிகவும் நேசிக்கப்பட்ட பிராண்டுகளில் ஒன்றின் சூரியன் மறையும் இந்த வேளையில், கடைசி முறையாக இந்த சீருடையை பெருமையுடனும் உணர்ச்சி வசப்பட்டும் அணிகிறேன். எங்கள் CEO சொன்னது போல ‘நாங்கள் ஒரு Damn Good ஏர்லைன் உருவாக்கினோம்!’ குட்பை விஸ்தாரா! உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம்” என்று முடித்தார்.

2015இல் தொடங்கப்பட்ட விஸ்தாரா, டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் கூட்டு முயற்சியாக சிறந்த சேவையை வழங்கி வந்தது. இந்த இணைப்பின் மூலம் ஏர் இந்தியா இந்தியாவின் ஒரே முழு சேவை விமான நிறுவனமாக மாறியுள்ளது.

Related posts