சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14) காலை நடந்த விபத்தில் இரு ஓட்டுனர்கள் காயமடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே நடந்த வாகன விபத்தில் இரண்டு டிரைவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்ததாக SCDF கூறியுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில் நார்த் பிரிட்ஜ் சாலை மற்றும் பார்லிமென்ட் பிளேஸ் சந்திப்பில் சாலை போக்குவரத்து விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 51 மற்றும் 59 வயதுடைய இரண்டு ஆண் ஓட்டுநர்களும், 28 முதல் 61 வயதுடைய மூன்று பயணிகளும் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.