சிங்கப்பூரில் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30, 2025 வரை வேப்ஸை எனப்படும் இந்த சிகரெட் வைத்திருந்ததற்காகவும், பயன்படுத்தியதற்காகவும் சுமார் 3,700க்கும் மேற்பட்டோர் பிடிபட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அன்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிகமாகும்.
விற்பனையாளர்கள் மீது வழக்கு
சிங்கப்பூரில் 17 முதல் 46 வயதுடைய எட்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட மொத்தம் 12 பேர் மீது வேப் பொருட்களை விற்பனை செய்ததற்காக HSA வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 11 அன்று பொதுமக்கள் புகார் கொடுத்ததையடுத்து வேப் பொருட்கள் மற்றும் வேப் தயாரிக்க தேவைப்படும் கூறுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் 21 வயது நபரைப் போலீசார் பிடித்தனர், மேலும் அங்கிருந்து கிட்டத்தட்ட 3,000 கிலோ வேப் பொருட்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் சிங்கப்பூரில் 19 முதல் 64 வயதுடைய மொத்தம் 31 குற்றவாளிகள் இந்த மின் சிகரெட் விவகாரத்தில் சிக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தத் தவறியதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. சிங்கப்பூரில் இப்பொது மின் சிகரெட் விவகாரம் முன்பை போல புகையிலை குற்றமாக கருத்தப்படாமல், போதைப்பொருள் குற்றமாக கருதப்படுவதால், இனி வேப்பிங் குற்றங்களுக்கு அபராதத்தை சரியான நேரத்தில் செலுத்தத் தவறிய குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள் என்று HSA தெரிவித்துள்ளது.
சிங்கையில் வெளிநாட்டு ஊழியரை அடித்த உயர் அதிகாரி – கொதித்தெழுந்த இணையவாசிகள்..!
இளைஞர்கள் பலர் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வரும் நிலையில், நாட்டில் இந்த மின் சிகரெட் புழக்கத்தை முற்றிலும் தடுக்க உச்சகட்ட விழிப்புடன் அரசு செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கில் சிக்குபவர்களுக்கு அதிக தண்டனை விதிப்பதன் மூலம் இந்த மின் சிகரெட் புழக்கத்தை அடியோடு நிறுத்தமுடியும் என்று சிங்கப்பூர் அரசு நம்புகிறது.