சிங்கப்பூரில் செங்காங் மருத்துவமனையில் 72 வயது மூதாட்டி மரணித்ததற்கு தடுப்பூசி காரணமல்ல என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாறாக அந்த மூதாட்டி இறந்ததற்கு இதய நோயே காரணமென்றும் உடல்கூராய்வில் தெரியவந்துள்ளது.
இம்மாதம் 4ம் தேதி செங்காங் மருத்துவமனையில் 72 வயது மூதாட்டி ஒருவர் மரணித்தார். இந்நிலையால் அதற்கு முன்னதாக இம்மாதம் 3ம் தேதி Pfizer BioNTech தடுப்பூசி அந்த மூதாட்டிக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்த மூதாட்டி தடுப்பூசி போட்டதால் மரணித்தார் என்று கூறப்பட்ட நிலையில், அந்த மூதாட்டிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததாகவும். அதானால் தான் அவர் மரணித்தாரே அன்றி தடுப்பூசியால் அல்ல என்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் முழுமையாக விடுபட ஒரே தீர்வாக உள்ளது தடுப்பூசிகளே என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரிலும் தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 12 வயது முதல் 39 வயது வரையிலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி சிங்கப்பூரில் தொடங்கி நடந்து வருகின்றது.