TamilSaaga

உலக நாடுகளை வியக்க வைத்த சிங்கப்பூரின் “மெகா ஆய்வு” அறிவிப்பு.. இனி “Chicken 65” சாப்பிட கோழியை கொல்ல தேவையில்லை – கண்டுபிடிச்சிட்டா அமெரிக்காவும் தலைவணங்கும்!

SINGAPORE: நமது சிங்கை தொழில்நுட்பத்தில் அடுத்தக்கட்டத்திற்கு பாய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இந்த ஆய்வு உறுதி செய்கிறது.

சும்மா இல்லீங்க.. ஒரு மெகா ஆய்வு நடக்கப்போகிறது. சிங்கப்பூரின் Nanyang Technological பல்கலைக்கழகத்தை (NTU) தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த பல்கலையும், சிங்கப்பூரின் கோழிகள் வளர்ப்பு நிறுவனமான Leong Hup-ம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில், இவ்விரு அமைப்புகளும் இணைந்து நேற்று (ஜூன்.5) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இரு தரப்பும் இணைந்து, கோழிப்பண்ணைகளில் அறுக்கப்படும் கோழிகளின் கழிவுகளை மறு ஆக்கம் செய்து, உருப்படியாக என்ன தயாரிக்க முடியும்? என்பதை கண்டறியப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இவர்கள் கோழியின் இறகை அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் keratin எனும் பொருளை வைத்து “தட்டுகள்” தயாரித்து அசத்தினார்கள். ஆனால், இது வெறும் டிரைலர் தான் என்பது போல் வெளியாகியுள்ளது தற்போதைய அறிவிப்பு.

அப்படி என்னதான் ஆய்வு? தலைப்பிலேயே நீங்கள் ஓரளவு கணித்திருக்கலாம்.

அதாவது, கோழியின் இரத்தம், கழிவுகள் உள்ளிட்டவற்றை வீணாக்காமல் அதன் மூலம் ஆய்வகத்திலேயே இறைச்சியை உருவாக்குவது எப்படி? என்று ஆராய்ந்து வருகின்றனர். அதாவது, ஆங்கிலத்தில் இதனை lab-grown meat என்று சொல்வார்கள்.

மேலும் படிக்க – வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. போலி டிராவல் ஏஜெண்ட் வெப்சைட்டுகள்.. 34,000 டாலரை இழந்த பயணிகள்.. சிங்கை போலீசார் “ஆதாரத்துடன்” எச்சரிக்கை

‘அப்படீன்னா இது செயற்கையாக உருவாக்கப்படும் கோழியோ’ என்று நினைத்து விட வேண்டாம். கோழியையோ, ஆட்டையோ அல்லது வேறு எந்த மாமிச உயிரினத்தையோ கொல்லாமல், இயற்கையான முறையில் தான் இது தயாரிக்கப்படுகிறது.

சற்று அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமெனில், இப்போது ஒரு மாடு இருக்கிறது எனில், அதன் Muscle tissue-ஐ ஊசி மூலம் வெளியே எடுப்பார்கள். அதை ஆய்வகத்துக்கு கொண்டுச் சென்று அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். பிறகு அந்த Muscle tissue Fat Cell, Muscle Cell என்று இரண்டாக பிரியும். ஆய்வர்களுக்கு தேவை இந்த Muscle Cell மட்டுமே. இந்த செல்லை பல மடங்காக பெருக்கி, அதவாது ட்ரில்லியன் கணக்கில் பெருக்கும் போது, ஒரு முழு மாமிசம் உருவாகிவிடும். இப்படித்தான், lab-grown meat தயாரிக்கப்படுகிறது.

இதைத் தான் நமது சிங்கப்பூரின் Nanyang Technological பல்கலைக்கழக மற்றும் Leong Hup இணைந்து ஆய்வு செய்கின்றனர். ஒருவேளை இந்த ஆய்வு வெற்றிப் பெற்றிவிட்டால், சிங்கப்பூரில் கழிவுகளற்ற முதல் பண்ணை எனும் பெயரை Leong Hup பெறும். அதுமட்டுமின்றி, உலக நாடுகள் மத்தியில் சிங்கப்பூரின் தொழில்நுட்ப “கெத்து” நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும்.

உலகளவில் 2013ல் முதன் முதலாக லண்டனில், lab-grown meat உணவாக பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts