சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் நேற்று பிற்பகலில் நல்ல கனமழையை அனுபாத்திருக்க வாய்ப்புகள் அதிகம். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கில் நல்ல பெய்தது, இதற்கிடையில், Jem மற்றும் Westgateல் உள்ள ஷாப்பிங் மாலில் மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில் TikTok செய்பவர் ஒருவர் வெளியிட்ட காணொளியில் பலத்த மழை பெய்வதையும், பின்னல் ஒரு குழந்தை “Typhoon” (சூறாவளி) என்று கத்துவதையும் காணமுடிந்தது. அந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த பலரும் மேற்கில் நேற்று அதிபலத்த காற்றுடன் மழை பெய்தது என்று கூறினார். ஆனால் அது ஒரு சூறாவளியை உருவாக்கும் அளவிற்கு பலத்த மழையா என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்தது.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பெய்த மழையின் அளவைக் காட்டும் வரைபடம் ஒன்றை சிங்கப்பூர் வானிலை ஆய்வுச் சேவை (MSS) இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. உலு பாண்டன் மற்றும் கென்ட் ரிட்ஜ் ஆகிய இடங்கள் அதிக அளவில் மழையை பெற்றுள்ளன, அங்கு 40mmக்கும் மேல் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த வீடியோவில் TikTok பயனர் கூறியதற்கு மாறாக, ஜூரோங் ஈஸ்டில் சூறாவளி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. சூறாவளி என்பது அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தகவல்படி, வெப்பமண்டல அல்லது மிதவெப்ப மண்டல நீரில் உருவாகும் மேகங்கள். அவை இடியுடன் கூடிய சுழலும், நீரமைப்பை அல்லது காற்றின் அமைப்பை குறிக்கிறது.
அதிகபட்சமாக 119கிமீ/மணி அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசும் போது மட்டுமே அது Typhoon என்று பெயரிடப்படும். ஆகவே நேற்று சிங்கப்பூரில் பலத்த மழைபெய்ததே அன்றி அது சூறாவளி காற்று அல்ல என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.