TamilSaaga

“சிங்கப்பூரில் மசாஜ் சென்டரில் பாலியல் சேவை?” : 2 “ஸ்பா” உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரில் ஸ்பா மற்றும் மசாஜ் நிறுவனங்களின் இரண்டு உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) தங்கள் ஊழியர்களை வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தவறியதாக நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்பட்டுள்ளனர். 37 வயதான ஜிம்மி சூ சூன் க்வோக், இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 100 டர்ஃப் கிளப் சாலையில் உள்ள டபிள்யூ வெல்னஸ் ஸ்பாவில் மூன்று பெண் ஊழியர்கள் தொடர்பாக மசாஜ் நிறுவன விதிகளின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ள.

சூயின் குற்றப்பத்திரிகைகளின் படி, அந்த மசாஜ் சென்டரில் ஏப்ரல் 20 அன்று மாலை 5.48 மணிக்கு ஒரு ஆண் வாடிக்கையாளருக்கு கூடுதலாக 50வெள்ளிக்கு சுயஇன்ப சேவை வழங்கியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல ஆகஸ்ட் 10 அன்று பிற்பகல் 3.25 மணியளவில், மற்றொரு ஆண் வாடிக்கையாளர் கூடுதலாக 50 வெள்ளிக்கு சுயஇன்ப சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில், மூன்றாவதாக ஒரு வாடிக்கையாளருக்கு பல பாலியல் சேவைகளை வழங்கியது, சுயஇன்பம் சேவைகள் வழங்கியது மற்றும் “பிரெஞ்சு முத்தம்” வழங்கியதற்கு கூடுதலாக 105 வெள்ளி பெறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, 48 வயதான கோ சி யுவானுக்கு ஆகஸ்ட் மாதம் ரிவர் பள்ளத்தாக்கு சாலையில் உள்ள பேலஸ் ஸ்பாவில் தனது ஊழியர் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதி செய்ய தவறியதாக ஒரு குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளது. அவருடைய ஊழியர் ஆகஸ்ட் 3 அன்று ஒரு வாடிக்கையாளருக்கு பல பாலியல் சேவைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு “கண்ணாடி சேவைக்கு” 100 வெள்ளி நிர்வாண மசாஜ்க்கு 150 வெள்ளி மேலும் பல உடல் ரீதியான சேவைக்கு 200 வெள்ளிக்கும் மேல் பெறப்பட்டுள்ளது.

மசாஜ் பார்லர்களில் தங்கள் ஊழியர்கள் பாலியல் சேவைகளை வழங்கவில்லை என்பதை உறுதி செய்ய தவறிய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், முதல் குற்றத்திற்காக 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். அவர்கள் மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக இருந்தால், அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts