சிங்கப்பூரில் வாரம் இருமுறை நடத்தப்படும் TOTO லாட்டரியின் இந்த வார முதல் குலுக்கலுக்கு முதல் பரிசு யாருக்கும் கிடைக்காத பட்சத்தில், இரண்டாம் பரிசாக 73 லட்ச ரூபாய் பரிசை இருவர் வென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் பிரபலமானது TOTO லாட்டரியின் குலுக்கல் வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான முதல் குலுக்கல் நேற்று நடந்தது. க்ரூப் 1 எனப்படும் முதல் பரிசு $1,170,302 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடியாகும். இந்த பரிசினை யாரும் வெல்லவில்லை.
இதையும் படிங்க: உங்க மொத்த கடனையும் ஒரே டிக்கெட்டில் காலி செய்ய சூப்பர் வழி… பம்பர் பரிசை கொடுக்கும் TOTO லாட்டரியை எப்படி வாங்கலாம்…?!
ஆனால் க்ரூப் 2வில் இருவர் இரண்டாம் பரிசை பெற்றுள்ளனர். $123,190 சிங்கப்பூர் டாலர் இந்திய மதிப்பில் 73 லட்சமாகும். இந்த பரிசுக்கான டிக்கெட்டை Lim Heng Ee – Blk 16 Upp Boon Keng Rd மற்றும் Singapore Pools Clementi N3 Branch, Blk 325 Clementi Ave 5 ஆகிய இடங்களில் இருந்து வாங்கி இருக்கிறார்கள். சனி, 20 மே 2023க்குள் வாங்கப்படாத பரிசுத்தொகை டோட் வாரியத்தால் நிர்வகிக்கப்படும் நன்கொடையாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தமுறை 95 நபர்கள் தலா $1783 சிங்கப்பூர் டாலரை பரிசாக பெற்றுள்ளனர். இது இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாயாக உள்ளது. வெற்றிபெற்ற அனைவருக்கு தமிழ் சாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்த வாரத்திற்கான இரண்டாவது குலுக்கல் வியாழக்கிழமை நவம்பர் 24ந் தேதி நடைபெற இருக்கிறது.