சிங்கப்பூரின் கட்டுமான மற்றும் கப்பல் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முதல் முறை சிங்கப்பூர் வருபவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் புதிதாக சிங்கப்பூர் வருபவர் என இந்த இரு பிரிவினரும் இந்த பயிற்சி வகுப்பை முடித்தாக வேண்டும். அதில் இங்கு உள்ள பொதுவான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும்.
அடுத்ததாக வேலை தொடர்பான பயிற்சி. இதில் இரண்டு வகை உண்டு அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்து
1. Basic Skill Test
2. High Skill Test
சிங்கப்பூர் வரும் Work Permit தொழிலாளர்கள் இந்த பயிற்சியை முடித்த பின்னரே முறையாக பணியமர்த்தப்படுவர். சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களுக்கு நடத்தப்படும் Basic Skill Test என்பது அவர்களின் அடிப்படை திறன்கள் மற்றும் அறிவை மதிப்பிடுவதற்கான ஒரு முறையாகும். இந்தத் தேர்வு, அவர்கள் கட்டுமானத் தளத்தில் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பணிபுரியத் தகுதியானவர்களா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இந்த Skill Test பயிற்சியை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும் இரண்டு மாதங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் Pre approval எனப்படும் தற்காலிக அனுமதி 2 மாதங்கள் வரை செல்லுபடியாக வேண்டும். சரி எந்தெந்த பயிற்சிகள் கட்டாயம். அது தவிர வேறு எந்தெந்த பயிற்சிகள் உண்டு:
Construction Safety Orientation Course (CSOC)
, இது ஒரு எட்டு மணி நேர பயிற்சி வகுப்பு ஆகும். இந்த பயிற்சி வகுப்பை யார் யார் பெறலாம் என்றால், ஏற்கனவே கட்டுமான துறையில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருப்பினும், தங்களுடைய CSOC அல்லது ACS சான்றிதழ்களை புதுப்பிக்க வேண்டும் என்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பை மேற்கொள்ளலாம். நீங்கள் தொடர்ந்து இந்த கட்டுமான துறையில் ஈடுபட விரும்பினால் இந்த சான்றிதழ் அவசியம்
பெற வேண்டும். இது ஒரு மறு சான்றிதழ் பெரும் பயிற்சியாகும். இந்த மறு சான்றிதழ் பெற்ற பின் நீங்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் கட்டுமான தொழிலில் ஈடுபடலாம்.
Apply Workplace safety & health in Construction Sites (ACS)
Apply Workplace safety & health in Construction Sites (ACS) என்ற பாதுகாப்பு பயிற்சி, கட்டுமான தொழிலில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என அனைவரும் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்புகள் சுமார் 18 மணி நேரம் நடைபெறும். இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளியும் வேலை பாதுகாப்பில் போதுமான பயிற்சி பெற்றவராக கருதப்படுவர். இது போன்ற பயிற்சி பெறுபவர், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தங்களுடைய பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மேலும், இந்த பயிற்சியில் நீங்கள், உங்களுடைய தொழில் சார்ந்த பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திறன் மேம்படுத்துதல், மேலும் கட்டுமான தொழிலாளியாக உங்களுடைய பொறுப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம். உங்களுடைய பணியிட மாதிரிகளை வைத்து உங்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் அது மட்டுமின்றி, ஆபத்து காலங்களில் அலாரங்களை இயக்கவும் பயிற்சி அளிக்கப்படும். இத்தகைய பயிற்சி பெறுவதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாக உங்கள் பணியிடத்தில் வேலை செய்ய முடியும். எதிர்பாராத விபத்துகளையும் சமாளிக்கும் திறன்களை பெற முடியும்.
Perform Work At Height (PWAH)
Perform Work At Height (PWAH), என்ற பயிற்சி, பொதுவாக உயரத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கான பயிற்சி. ஆம் இன்றைய காலகட்டத்தில் கட்டுமான துறையில் அதிகபட்சம் உயர்ந்த கட்டிடங்களை அதிகம் கட்டுகின்றன. இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் இந்த PWAH பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உயரத்தில் பணிபுரியும் அபாயங்களை கற்பிப்பதோடு, அதற்குண்டான பாதுகாப்பு நடைமுறைகளையும் கற்பிக்கப்படும். மேலும் இந்த பயிற்சியின் மூலம் தடுப்பு அமைப்புகள் மற்றும் உயர் கட்டுமான உபகரணங்களை பயன்படுத்துவது என்பது போன்ற விஷயங்களில் பயிற்சி பெறுவர்.
Perform Metal Scaffold Erection (PMSE)
Perform Metal Scaffold Erection (PMSE), என்ற இந்த பயிற்சி வகுப்பு சுமார் 38 மணி நேரம் நடத்தப்படும் பயிற்சியாகும். WSH 2006 Act-ன் படி, கட்டுமானத்துறையில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களும் இந்த பயிற்சி வகுப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் உலோகசாரக்கட்டுகளை இப்படி கட்டமைப்பது மற்றும் வேலை முடிந்த பின் அதை எவ்வாறு பிரித்தெடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்கள் நிறுவனத்தில் இந்த PMSE பயிற்சி பெற்றவரை மட்டுமே இந்த சாராக்கட்டுகளின் வேலைகளுக்கு பயன்படுத்த முடியும்.
Perform work in Confined Space Operation (PWCSO)
Perform work in Confined Space Operation (PWCSO), என்ற 14 மணி நேர பயிற்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பெற வேண்டிய பயிற்சி ஆகும். இந்த பயிற்சி தொட்டிகள், குழாய்கள், சுரங்கங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கான பயிற்சி ஆகும். இது போன்ற இடங்களில் வேலை செய்பவர்களுக்கு ஆபத்துகள் அதிகம் வரலாம், எனவே இதற்கென தனி பயிற்சி பெற்ற பின்னரே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த பயிற்சியில் வரையறுக்கப்பட்ட இடங்களில் வேலை செய்வது, அவசர நிலைகளில் சரியாக செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்படும். வரையறுக்கப்பட்ட இடங்களில் தேவைப்படும் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த பயிற்சியில் அறியலாம்.
மேலே சொன்ன பயிற்சிகள் அல்லாமல் இன்னும் நிறைய பயிற்சிகளை MOM அமைப்பு உருவாக்கியுள்ளது. இது போன்ற பயிற்சிகள் கட்டுமான துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள் ஆகும். நீங்கள் கட்டுமான துறையில் பணிபுரித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது பணிக்குரிய விரும்புகிறீர்கள் என்றால் இது போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு அதற்குரிய சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். இது போன்ற பயிற்சிகளை பெற விரும்பினால் நீங்கள் MOM அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சிகளை பெற வேண்டும். ஏனென்றால் அப்படி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதர்களுக்கே மதிப்பளிக்கப்படும். இது போன்ற பயிற்சிகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கட்டணங்கள் வேறுபடும். நீங்கள் உங்களுக்கு தகுந்த மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சிகளை பெற்று தகுதியுள்ள தொழிலாளராக பணிபுரியலாம்.
2025-ல் சிங்கப்பூரின் கட்டுமானத் துறை நிறுவனங்கள் எவ்வாறு பணியாளர்களை தேர்வு செய்கிறது?