TamilSaaga

சிங்கப்பூர் மக்கள் எதிர்காலம் குறித்து கவலை… 10ல் 3 பேருக்கு வேலை இழப்பு பற்றி அச்சம் – ஆய்வில் தகவல்

சிங்கப்பூரின் கொள்கை ஆய்வு மையம் எனும் அமைப்பு 2019 ஆண்டு துவங்கி கடந்த மார்ச் மாதம் வரையிக் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடியுரிமை பெற்ற மக்களிடம் ஆய்வு நடத்தியது. அவர்கள் தங்களது கருத்துக்களை இதில் பகிர்ந்துகொண்டனர்.

இந்த ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒவ்வொரு மனிதனின் பண்புகள் மற்றும் மனநிலை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு அதன் ஆய்வு முடிவின் முதல் பகுதி வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் 10ல் 9 சிங்கப்பூர் குடிவாசிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்கள் மேலும் அதுமட்டுமல்லாமல் வேலை வாய்ப்பு பற்றிய கவலை அவர்களுக்கு அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. தங்களுடைய எதிர்கால வாழ்க்கை, வேலைவாய்ப்பு மற்றும் குழந்தைகள் வாழ்க்கை பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

வேலை பற்றிய கவலை:
சிங்கப்பூரில் 10ல் 7 பேர் தங்களை ஒரு சாதாரண நடுத்தர குடும்பாக பதிவு செய்துள்ளார்கள். மாறிவரும் சூழல், நிலைத்தன்மையற்ற நிலைமை போன்றவற்றால் அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள்.

சுமார் 10 பேரில் 3 பேருக்கு தங்கள் இருக்கும் வேலையை இழந்துவிடுவோம் மேலும் புதிய வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற கவலை அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்காலத்தை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள் என ஆய்வு கூறுகிறது.

வேலை இல்லாதவர்கள் மற்றும் தற்போது படித்துக்கொண்டு இருப்பவர்கள் என இவர்கள் வேலைவாய்பை பற்றியே பெருமளவில் கவலைப்படுவது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related posts