சிங்கப்பூரில் செம்பவாங் (Sembawang) பகுதி அதன் இயற்கையான வெப்ப நீரூற்றிற்கு பெயர் பெற்றதாக இருந்துவருகின்றது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 26) தொடங்கப்பட்டுள்ள மூன்று புதிய பாரம்பரியப் பாதைகள் அப்பகுதியின் கடற்படை வரலாறு மற்றும் அங்குள்ள கலாச்சாரங்களின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
செம்பவாங் GRC மற்றும் தேசிய பாரம்பரிய வாரியத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்களால் இந்த பாதைகள் நிறுவப்பட்டுள்ள. இது மொத்தம் 20 கிமீ பரப்பளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியின் ஐந்து எம்.பி.களான – சுகாதார அமைச்சர் ஓங் யே குங், டாக்டர் லிம் வீ கியாக், திருமதி. மரியம் ஜாபர், திருமதி. போ லி சான் மற்றும் திரு. விக்ரம் நாயர் ஆகியோர் செம்பவாங் பூங்காவில் நடைபாதை துவக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் ஒவ்வொரு சுய-வழிகாட்டப்பட்ட பாதைகளையும், Gov.sg என்ற இணையத்தில் காணப்படும் வரைபடங்களைப் பயன்படுத்தி ஆராயலாம். இது பிராந்திய வரலாற்றின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. மேலும், செம்பவாங் பூங்காவின் 7 கிமீ நீளமுள்ள இந்த பாதையில் உள்ள வரலாற்று அடையாளங்கள், பங்கேற்பாளர்களை காலம் கடந்து பயணிக்க உதவும். புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலும் இதில் அடங்கும்.
கோவிலின் தோற்றம் 1962ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது, முன்னாள் செம்பவாங் கடற்படை தளத்தின் இந்து கப்பல்துறை தொழிலாளர்கள் முதலில் கான்பெரா சாலை அருகே ஒரு மரத்தின் கீழ் ஒரு சிறிய ஆலயத்தை கட்டினர். 1996ம் ஆண்டில் கோவில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.
இப்போது பெருந்தொற்றின் காரணத்தால் நம்மால் உண்மையில் வெளிநாடுகளுக்கும் பிற இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நமது நாட்டைப் பற்றி மேலும் அறிய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.