சரியாக 1993ம் ஆண்டு, 24ம் தேதி மே மாதம் “அமராவதி” என்ற ஒரு திரைப்படம் வெளியானது. ஒல்லியான உருவம், வெண்ணிற தோல் என்று அங்கும் இங்கும் ஒரு நாயகன் வலம்வர, அன்று யாருக்கும் தெரியாது அவர் தான் பிற்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக உருவெடுக்க போகிறார் என்று. இன்றைய தேதியில் ‘தல’ என்றால் போதும் அரங்கம் அதிரும்.
சுமார் 29 ஆண்டுகளாக 60 படங்களில் நடித்துள்ள அஜித், இந்த திரையுலகில் எத்தனையோ தடைகளை மீறி சாதித்த ஒரு மனிதன் என்றால் அது சற்றும் மிகையல்ல. “ஒரு நடிகன் இத்தனை Flop படங்களை கொடுத்ததும், சினிமாவில் நிலைத்து நிற்கிறான் என்றால் அது நான் தான், என் ரசிகர்களே அதற்கு காரணம்” என்று அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
அவருடன் கிசுகிசுவில் சிக்கிய ஒரே நடிகை அவரின் துணைவியார் ஷாலினி மட்டும் தான், ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு, உடன் பணியாற்றும் கலைஞர்களிடம் பரிவு, எந்த நடிகரை பார்த்தாலும், “ஹலோ… i am அஜித்” என்று தன்னைத்தானே அறிமுகம் செய்துகொள்ளும் அந்த தன்னடக்கம் என்று அவருக்கு நிகர் அவரே.
சரி இவ்வளவு நேர்மையுடன் வாழும் அஜித் குமார் மீது யாரேனும் குறைகூறியுள்ளார்களாக என்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எதுவுமே இல்லை. ஆனால் நம் சிங்கப்பூர் தொடர்புடைய ஏதோ ஒரு விஷயம் அவரை பல ஆண்டுகளாக பின் தொடர்ந்த வருகின்றது.
அது தான் உலக நாயகன் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அவர் மீது முன்வைக்கும் ஒரு குற்றச்சாட்டு. 1996ம் ஆண்டு அஜித் திரைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் தன்னிடம் 6 லட்சம் கடந்த வாங்கியதாக அவர் ஒரு புகாரை முன்வைக்கிறார்.
1996ம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தையை சிங்கப்பூர் அனுப்புவதராக அந்த தொகையை தன்னிடம் Draft வடிவில் வாங்கினார் என்றார் அவர். மேலும் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தில் அஜித் நடிக்க அவருக்கு 12 லட்சம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 18 லட்சம் ரூபாயை அஜித் தனக்கு தர வேண்டும் என்று கூறி 25 ஆண்டுகளாக போராடி வருதாகவும் அவர் கூறுகின்றார். இன்று உச்ச நட்சத்திரமான அவரை நேரில் சந்திக்க முயன்றும் முடியவில்லை என்றும். கடிதம் மூலம் அவரை தொடர்புகொள்ள பலமுறை தான் முயற்சித்துள்ளதாகவும் கூறுகின்றார் அவர்.
இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் அஜித் 18 லட்சத்தை திருப்பித்தர மறுக்கிறாரா?, இவர் சொல்வது வெறும் பொய் என்று அஜித்தின் ரசிகரிகள் இவர் மீது குற்றச்சாட்டு வைத்ததும் உண்டு. ஆனால் அஜித் தனக்கு தர வேண்டிய 18 லட்சத்திற்கு எல்லா ஆதாரமும் தன்னிடம் உள்ளது என்று கூறி வருகின்றார் தயாரிப்பாளர் மாணிக்கம்.
சுமார் 25 ஆண்டுகளாக அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பது மர்மாகவே இருக்கிறது. சிங்கப்பூர் தொடர்பாக தல அஜித் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது இன்னும் பலருக்கு தெரியாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.