TamilSaaga

குழந்தைகளை கவரும் வகையில் கோலாகாலமாக திறக்கப்பட்டது சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல்… சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் பராமரிப்பு பணிக்காக 2020 ஆம் ஆண்டு தற்காலிகமாக மூடப்பட்டது.இந்நிலையில் அதன் பராமரிப்பு பணிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டு இன்று கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் விமான நிலையத்தில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக நான்கு மாடி உயரத்திற்கு சிறப்பு நீர்வீழ்ச்சி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது 14 மீட்டர் உயரம் மற்றும் 17 மீட்டர் அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது . அந்த நீர்வீழ்ச்சியில் இசைக்காட்சியானது 4 நிமிடத்திற்கு ஒருமுறை மாறி மாறி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் கண்டு களிக்கும் வகையில் தோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.அதில் கவரும் வகையில் மீன்கள் மற்றும் பல்வேறு தாவரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தின் வெப்பநிலையை மதிப்பீட்டு கூறும் வகையில் தோட்டத்தின் அருகே சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் சிங்கப்பூரில் அரிதாக காணப்படும் 100 சிற்றினங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் விதவிதமான மீன்கள் மக்களை கவர்வதற்காக விடப்பட்டுள்ளன. மேலும் விதவிதமான பூச்சிகள் மற்றும் பறவைகளின் இசைகளை கேட்கும் வண்ணம் சிறப்பான இசை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து இரண்டாம் டெர்மினல் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் துரிதமாக முடிக்கப்பட்டதால் அதிகமான பயணிகளை கையாள்வதற்காக இந்த ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 மில்லியன் பயணிகளை கூடுதலாக கையாள முடியும் என விமான நிலையம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் மொத்தமாக ஆண்டிற்கு 90 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இரண்டாவது டெர்மினல் இன் மொத்த பரப்பளவு 21,000 சதுர மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று நோயின் பாதிப்பு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில் இனிவரும் காலங்களில் சிங்கப்பூருக்கு அதிகமான விமான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இதனை சமாளிப்பதற்காக இரண்டாவது டெர்மினல் ஆனது விரைவாக திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts