SINGAPORE: இவர் செய்த குற்றத்தை நினைத்தாலே உடல் கூசும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். சிங்கையும் இவருக்கு மிகக் கடுமையான தண்டனையை விதித்துள்ளது.
ஆம்! சிங்கப்பூரில் பள்ளிகள் முடிந்த பின்னர் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள நடத்தப்படும், after-school care centre-ல் 7 வருடங்களாக ஆண் பிள்ளைகளை நாசம் செய்த நபருக்கு இன்று சிங்கை நீதிமன்றம் தனது சிங்க முகத்தை காட்டியுள்ளது.
வழக்கு மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி, அந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடவில்லை.
செய்த குற்றம் என்ன?
“dangerous paedophile” என்று நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட அந்த நபர் வெறும் 30 வயதே ஆன ஆசிரியரின் உதவியாளர் ஆவார். இவர் தன்னிடம் படிக்கும் 9 முதல் 11 வயதுள்ள ஆண் பிள்ளைகளை தேர்வு செய்து, அவர்களை தன் காம இச்சைக்கு பயன்படுத்தி நாசம் செய்துள்ளார்.
மொத்தமாக இவர் மீது 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒன்று மிக மோசமான கற்பழிப்பு. மற்றொரு 23 பாலியல் வன்கொடுமை வழக்குகள். 22 மைனர் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அடக்கம்.
இந்த நபர் 2013 மற்றும் 2020 க்கு இடையில் 11 சிறுவர்களை, கல்வி மையத்திலும் அவரது வீட்டிலும் பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் பிறகு, ‘Grindr’ என்றொரு டேட்டிங் ஆப் மூலம், 13 முதல் 14 வயதுள்ள சிறுவன் ஒருவனை தேர்வு செய்து, அவரை நேரில் சந்தித்து, தனது காம இச்சைக்கு இரையாக்கியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற நீதிபதி மாவிஸ் சியோன் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த நபர், பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பு மையத்தில் தனது பதவியை இழிவான காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கிறார். இடைவிடாமல், சுமார் 7 ஆண்டுகளாக சிலரிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் என்ன கொடுமை என்னவெனில், அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு, நல்லவர் போல் பேசியதில், பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அவர்களாகவே இந்த நபருடன், சினிமாவுக்கும், டின்னருக்கும், பேட்மிண்டன் விளையாடவும் அனுமதித்துள்ளனர். சிலர், தங்கள் வீட்டுக்கு அழைத்து இந்த நபருக்கு விருந்தே வைத்துள்ளனர். அந்த அளவுக்கு தனது ‘அம்மாஞ்சி’ ஆட்டத்தை ஆடியிருக்கிறார்.
குறிப்பாக, சிறுவர்களை தன் வசியப்படுத்த பல ஜித்து வேலைகளை செய்திருக்கிறார். அவர்கள் மீது அளவுக்கடந்த பாசம் கொட்டுவது, அவர்களுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுப்பது, மொபைல் ஃபோன் கேம் கிரேடிட்ஸ் கொடுப்பது, வீடியோ கேம்ஸ் விளையாட தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்று சிறுவர்களின் நம்பிக்கையை மெல்ல மெல்ல சம்பாதித்து இருக்கிறார்.
பிறகு, மெல்ல அந்த சிறுவர்களை கட்டிப்பிடிப்பது, ஏதாவது ஒரு விஷயத்திற்கு ஆறுதல் சொல்ல கட்டிப்பிடித்து, உடல் அவயங்களில் கை வைப்பது என்று தனது காம இச்சைகளை அவிழ்த்துவிட தொடங்குவார். பல சந்தர்ப்பங்களில், இரண்டு அல்லது மூன்று சிறுவர்களை ஒன்றாக குளியலறை, கழிவறை, போன்ற இடங்களுக்கு அழைத்துச் என்று, அங்கும் தன் வேலையை செய்திருக்கிறார். இன்னும் கொடுமையாக, சில நேரங்களில், அவர் சிறுவர்களை ஒருவருக்கொருவர் பாலியல் செயல்களைச் செய்ய வைத்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அப்படி அவரிடம் இருந்து 105 வீடியோக்கள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளன.
இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவரது கேவலமான லீலைகள் அம்பலமாக, கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அவரது வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினார்கள். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இன்று (ஆக.22) அந்த நபருக்கு 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 24 சவுக்கடிகளும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 சவுக்கடி வாங்கினாலே, ஒருவர் நடப்பது கஷ்டம். 24 சவுக்கடி என்றால், உயிர் பிழைப்பதே கஷ்டம் என்கின்றனர், இதற்கு முன்னர் சவுக்கடி வாங்கியவர்கள்.
அவர் தாக்குதல்களின் வீடியோக்களையும் பதிவு செய்தார் – அவரது மின்னணு சாதனங்களில் 105 கிளிப்புகள் காணப்பட்டன.
அவர் சிறுவர்கள் மீது பாலியல் செயல்களைச் செய்து அவர்களைத் தன் மீது பாலியல் செயல்களைச் செய்ய வைப்பதற்கு முன், அவர்களைக் கட்டிப்பிடிப்பது போன்ற அப்பாவித்தனமான உடல் தொடர்புகளுடன் தொடங்கினார்.