சிங்கப்பூரில் வேலைக்கு வருவதற்காக தமிழக இளைஞர்கள் ஏஜென்டிடம் பணம் கட்டி ஏமாந்த கதையை தான் இதுவரை நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்பொழுது பல திடுக்கிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சிங்கப்பூரை பொறுத்தவரை, சம்பளம் வந்தாலும் அதை செலவு செய்வதற்கு நம்மை சுற்றி ஆயிரம் வழிகள் இருக்கின்றன. எவ்வளவு சம்பளம் வருகின்றது? எதற்காக நான் செலவு செய்கிறோம்? என்ற கேள்வி கேட்க ஆளில்லாமல் நம் கைகளில் பணம் புலங்குவதே இளைஞர்கள் தவறு செய்வதற்கு முதல் காரணமாக அமைகின்றது.
இவற்றையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக செலவுகளை சமம் செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்பும் சில அக்கறை உள்ள இளைஞர்களே வாழ்க்கையில் முன்னேறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுத்தர வகுப்பு குடும்பத்திலிருந்து லட்சக்கணக்கில் ஏஜென்ட் பீஸ் கட்டி சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் காதல் வலையில் விழுந்துள்ளார். இருவரும் விடுமுறையின் பொழுது பல்வேறு இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர்.
சிங்கப்பூரை பொறுத்தவரை ஒரு இடத்திற்கு போக வேண்டுமானால் எவ்வளவு செலவாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாமெல்லாம் மாதம் ஒருமுறை வெளியில் சென்று சுற்றுவதே சிங்கப்பூரில் பெரிய விஷயம் தான். அப்படி இருக்கும் பொழுது இந்த இளைஞர் சம்பாதித்த பணத்தை எல்லாம் உல்லாசமாக ஊர் சுற்றி கழித்துள்ளார். கம்பெனியில் முறையாக சம்பளம் வரவில்லை என்று எதையோ சொல்லி வீட்டிலும் சமாளித்துள்ளார். கடைசியாக வீட்டில் திருமண ஏற்பாடு செய்யும் வேலையில் அந்த பெண்ணிற்கு விஷயம் தெரிந்து விட, அப்பொழுதுதான் அந்த பெண்ணின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.
தன்னை காதலித்ததற்காக, 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் நான் விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டேன். அப்படி இல்லையென்றால் உங்களிடம் போலீசில் புகார் கொடுப்பேன் என்று சொல்லி மிரட்ட, சிக்கலில் இருந்து வெளிவருவதற்காக சொந்த ஊரிலிருந்து கடன் வாங்கி பணத்தைப் புரட்டி பெற்றோர்கள் இளைஞர்களுக்கு அனுப்பி உள்ளனர். அதன் பிறகு எப்படியோ ஒரு வழியாக தப்பித்து இளைஞர் ஊருக்கு வந்திருக்கின்றார். சொந்த பந்தம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சிங்கப்பூரில் வேலை செய்யும் இளைஞர்களே, குறுகிய கால சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நீண்டகால குடும்ப பந்தத்தை இழக்காதீர்கள். நாம் சென்றிருப்பது பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்பதை மணிக்கு ஒரு முறை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.