உலகில் உள்ள பல தொன்மையான மொழிகளில் அண்டை நாடான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மொழியும் ஒன்று. நமது சிங்கப்பூரிலும் தமிழ் மொழியும் தமிழர்களும் ஓங்கி வளர்ந்து நிற்பது பலரும் அறிந்த உண்மையே. இந்நிலையில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு பழமையான மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் உரசல்களையும் பற்றி தற்போது ஆழமாக ஆய்வு செய்துள்ளார் அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ்.
இந்நிலையில் நாளை இரவு 8.30 மணியளவில் மெய்நிகர் காணொளி வழியாக தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கு இடையிலான தொடர்பு குறித்து “Tamil & Sanskrit : The Two Eyes Of Siva என்னும் தலைப்பில் அவர் ஆங்கிலத்தில் உயையாற்றவுள்ளார். இந்த நிகழ்வு குறித்து Centre for Singapore Tamil Culture எனப்படும் தமிழ் பண்பாட்டு மையம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
zoom செயலி மூலம் இந்த உரையாடல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மக்கள் வரும் சனிக்கிழமை இரவு 8.30pm மணியளவில் https://nlbsingapore.zoom.us/j/99175623345 என்று இணையத்திற்கு சென்று Meeting ID: 991 7562 3345 Passcode: 602252 என்று ID மற்றும் Password அளித்து இதில் பங்குபெறலாம்.