TamilSaaga

தமிழக இளைஞர்கள் சிங்கப்பூருக்கு Work Passல் வருவது சிறந்ததா? : லட்சங்களில் செலவு செய்து ஏற்கனவே வந்தவர்களின் நிலை என்ன?

இந்திய மற்றும் தமிழக தொழிலாளிகள் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களும் விரும்புவது சிங்கப்பூர் வேலையைத்தான். சரி இந்த பதிவில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு Work Pass எடுத்து வருவது எந்த அளவிற்கு சிறந்தது. அப்படி சிங்கப்பூருக்கு WPல் வந்த தமிழர்களின் நிலை என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

S Pass

சிங்கப்பூருக்கு புறப்பட நினைக்கும் எல்லா தமிழர்களின் முதல் எதிர்பார்ப்பு இந்த “S Pass” வேலை தான் என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல. காரணம் நல்ல சம்பளம், விரைவில் பெற்ற கடன்களை அடைத்துவிடலாம், சீக்கிரம் செட்டில் ஆகலாம் என்பதற்காகத்தான்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது, S Pass விசாவில் சிங்கப்பூர் வர பல லட்சங்கள் செலவாகும், மேலும் மிகக்குறைந்த ஆண்டுகளுக்கு மட்டுமே உங்கள் சிங்கப்பூர் நிறுவனம் உங்களை கான்ட்ராக்ட்டில் எடுக்கும். ஆகையால் பெரிய அளவில் சம்பளம் கிடைத்தாலும் ஓராண்டை தாண்டி சிங்கப்பூரில் தாக்குபிடிப்பது கடினமே.

“சாப்பிட்டு காசு கொடுக்க வேண்டாம்” – வயிறார சாப்பாடு.. நிறையும் மனசு – சிங்கப்பூர் “அன்னலக்ஷ்மி” உணவகம்

இந்த நேரத்தில் தான் தொழிலாளர்கள் பலரும் சிந்திக்கும் ஒரு விஷயம் Work Pass மற்றும் PCM பெர்மிட். S Passஐ ஒப்பிடும்போது WPக்கு ஆகும் செலவு என்பது கணிசமான அளவில் குறையும். அதேபோல வேலைவாய்ப்பும் சிங்கப்பூரை பொறுத்தவரை WPயில் வருபவர்களுக்கு அதிகம். நிச்சயம் S Passல் கிடைக்கும் அளவிற்கு இல்லையென்றாலும், WPயில் வருபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைத்து வருகின்றது.

Work Permitல் சிங்கப்பூர் வர என்ன செய்யவேண்டும்?

Work Permitல் சிங்கப்பூர் வர நீங்கள் முதலில் செய்யவேண்டியது Skilled Test முடிப்பது தான், நீங்கள் Skilled Course நல்லபடியாக முடிக்கும் நிலையில் நீங்கள் Skilled படிக்கும் இடத்திலேயே நிறைய ஏஜெண்டுகளை உங்களால் பார்க்கமுடியும். அவர்கள் மூலமாக உங்கள் சான்றிதழ்களை வைத்து நீங்கள் சிங்கப்பூர் வரலாம், நிச்சயம் இதற்கு ஏஜெண்டுகள் கணிசமான (லட்சங்களில்) ஒரு தொகைகளை பெற்றுக்கொள்வார்கள்.

கடனை வாங்கி சிங்கப்பூருக்கு நீங்கள் WPயில் வந்திறங்கிய 14 நாட்களுக்கு உங்களுக்கு Medical Test மற்றும் Safety Oriented Course எனப்படும் SOC ஆகிய இரண்டும் முடிக்கப்படும். அவ்வளவு தான் அதன் பிறகு உங்கள் வாழ்க்கை ஓடும் வேகம் மாறும். பரபரப்பான சிங்கப்பூர் நகரில் நீங்களும் பரபரப்பாக இயங்க தயாராகவேண்டும்.

பரபரப்பான சிங்கை நகரில் நமது தொழிலாளர்களும் பம்பரமாக இயங்க துவங்குவார்கள், முதலில் நீங்கள் சிங்கப்பூர் வந்ததும் கவனிக்க வேண்டியது Safety தான். வேலை நேரத்தில் கட்டாயம் உங்கள் பாதுகாப்பு உபகரணங்களை கழட்ட கூடாது. அப்படி முறையான பாதுகாப்பு உபகரணங்கள் உங்கள் நிறுவனத்தால் அளிக்கப்பட்டபோதும் அதை நீங்கள் பயன்படுத்தாமல் போனால் MainCon நிறுவனங்கள் உங்கள் நிறுவனத்திற்கு Fine போடுவார்கள்.

நிச்சயம் உங்கள் சம்பளத்தில் இருந்து அந்த Fine பிடித்தம்செய்யப்படும் என்பதை மறக்க வேண்டாம். ஆகையால் வேலை நேரத்தில் எப்போதும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தே பணி செய்யுங்கள்.

WPயில் வந்தவர்களின் நிலை என்ன?

WPயில் சிங்கப்பூர் வருபவர்களுக்கு குறைந்தபட்ச நாள் சம்பளம் 18 வெள்ளியாக உள்ளது என்று கூறப்படுகிறது (10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நிலை). இதை கணக்கிட்டு பார்த்தால் உங்கள் கையில் மாத கையிருப்பு 468 வெள்ளி மட்டுமே இருக்கும் அதுவும் நீங்கள் வேலை செய்த 26 நாட்களுக்கு.

சிங்கப்பூரை பொறுத்தவரை ஞாயிற்று கிழமை என்பது ஓய்வு நாள், ஆனால் WPயில் நீங்கள் பணிக்கு வரும்போது உங்கள் முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப ஞாயிற்று கிழமைகளிக்கும் உங்களுக்கு வேலை அளிக்கப்படலாம். ஆனால் நிச்சயம் அதற்கு கூடுதல் சம்பளம். நீங்களும் அந்த 26 நாட்களை நம்பியே இல்லாமல் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் OT பார்த்தால் 800 வெள்ளி வரை நீங்கள் சம்பாரிக்க முடியும்.

இதில் முக்கால்வாசி பணத்தை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அனுப்பியதுபோக மீதமுள்ள பணத்தை தான் உங்கள் செலவுக்கு என்று வைத்துக்கொள்ள முடியும்.

இந்த நிலையை எப்படி மாற்றுவது? மாற்றமுடியுமா?

நிச்சயம் முடியும், சிங்கப்பூர் வந்ததும் உங்கள் முடிந்த அளவிற்கு உங்கள் வேலை சம்மந்தமான Courseகளை படிக்க துவங்குங்கள். ஆனால் அதற்கும் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து தான் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

தேக்காவில் ஹோட்டல் வைத்துள்ள தமிழர் – வரிசையில் நின்று உணவு வாங்கும் சிங்கப்பூர் போலீஸார்

கடுமையாக உழைத்து, வீட்டிற்கு பணம் அனுப்பி, சொந்த செலவுகளை முற்றிலும் தவிர்த்து தியாக வாழ்க்கை வாழ்ந்து, செலவு செய்து மேற்கொண்டு படித்தால் நிச்சயம் வெகு சீக்கிரத்தில் நீங்கள் நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்கு உங்களால் செல்ல முடியும். சிங்கப்பூருக்கு WPயில் வந்த பலர் இதைத்தான் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு வந்து கடினமாக உழைத்தால் நிச்சயம் நீங்களும் ஒரு நாள் மாபெரும் மனிதனாக உருவெடுக்கலாம் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts