TamilSaaga

‘சோதனை மேல் சோதனை’.. சிங்கப்பூரில் தமிழ் மொழி பயன்பாடு குறைவு – வீட்டுல கூட தமிழ்-ல பேசலைனா எப்படி?

கடந்த 2020ம் ஆண்டு சிங்கப்பூர் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் அடிப்படையில் வீடுகளில் தமிழ்,மலாய் மற்றும் மாண்டரின் போன்ற மொழிகளின் பயன்பாடு குறைந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

இம்மொழிகளின் பயன்பாடு குறைய காரணம் பெரும்பாலான மக்கள் வீடுகளில் ஆங்கிலத்தை அதிகமாக பேச பயன்படுத்துவது தான் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வீடுகளில் பயன்படுத்தும் மொழி தொடர்பான புள்ளி விவரங்கள் பின்வருமாறு,

2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொழிகளின் பயன்பாடு,

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு நகைகள் வாங்கிட்டுப் போறீங்களா?.. இனி “சுங்கவரி” செலுத்தணும் – புதிய தீர்ப்பு

தமிழ் – 2.5 சதவீதம்
மலாய் – 9.2 சதவீதம்
சீன மொழி – 8.7 சதவீதம்
மாண்டரின் – 29.9 சதவீதம்
ஆங்கிலம் – 48.3 சதவீதம்
மற்றவை – 1.4 சதவீதம்

2010ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொழிகளின் பயன்பாடு,

தமிழ் – 3.3 சதவீதம்
மலாய் – 12.2 சதவீதம்
சீன மொழி – 14.3 சதவீதம்
மாண்டரின் – 35.6 சதவீதம்
ஆங்கிலம் – 32.3 சதவீதம்
மற்றவை – 2.3 சதவீதம்

இந்த இரண்டு புள்ளி விவரங்களின்படி ஆங்கில மொழி பயன்பாடு 10 ஆண்டுகளில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ் மொழி 0.8 சதவீதமும், மலாய் 3 சதவீதமும், சீன மொழி 6.4 சதவீதமும் மற்றும் மாண்டரின் மொழி 6.3 சதவீதமும் பயன்பாடு குறைந்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts