சிவகங்கை மாவட்டம் கூத்தலூரை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் எஸ்.ஐ.சாமியின் செல்லப்பிள்ளை இவர் தான்.தொழில், சமூக சேவை என தொட்டதெல்லாம் வெற்றி கொள்ளும் சிங்கப் பெண்ணும் இவர் தான்.
சிங்கப்பூர் எஸ்.ஐ.எஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ஜாய்ஸ் கிங்ஸ்லி. ” வணக்கம் என்னுடைய பெயர் ஜாய்ஸ் கிங்ஸ்லி. அப்பா அம்மா அந்தக் காலத்துல இந்தியாவில இருந்து வந்தவங்க தான். அப்பா பேரு சின்னசாமி இருதயசாமி. சிங்கப்பூர்ல எல்லாருக்கும் எஸ்.சாமினு தான் தெரியும். அம்மா ஜோசபின் எட்வர்ட் மேரி. எல்லாருக்கும் குளோரினு சொன்னா தான் தெரியும்.
அப்பாவுடைய சொந்த ஊர் கூத்தலூர். காரைக்குடியில இருந்து 12 கி.மீ இருக்கும். அம்மா தேவகோட்டை. அதுவும் காரைக்குடியில இருந்து 18 கி.மீ இருக்கும். அப்பா அந்தக்காலத்துல 14 வயசுல சிங்கப்பூருக்கு வந்தாங்க. வந்த காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்ருக்காங்க. அப்பா எதோ ஒரு இடத்துல வேலை செஞ்சு அப்புறமா சொந்தமா தொழிலை உருவாக்கி இந்த அளவுக்கு வந்திருக்காங்க.
என் குடும்பத்துல 4 பிள்ளைங்க. ரெண்டு அண்ணன். ஒரு அக்கா. ஸோ நான் தான் கடைசிப் பொண்ணு. என்னோட அஞ்சு வயசுல ஒவ்வொரு சாயங் காலமும் அப்போவோட கடைக்கு வந்திடுவேன். சின்னப்புள்ளையா அப்பா கையப்புடுச்சிக்கிட்டு பல வருசங்கள் அப்பா கூடவே கடைக்கு வந்திருக்கேன். ஏன்னா ஈவ்னிங்ல ஃபேண்டா கிரேப்பும், ஒரு கேக்கும் வாங்கித் தருவாங்க. அதுக்காகவே தினமும் அவங்களோட கடைக்கு வந்திடுவேன்.
அப்படியே 4 பேரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூர் தான். நான் படிச்சது செயிண்ட் மார்கரெட் பிரைமரி & செகண்ட்ரி ஸ்கூல்ல தான்.
சின்ன வயசுல இருந்து டீச்சர் ஆகணும்ங்கிறது தான் என் கனவா இருந்துச்சு. பள்ளியில ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ், ஸ்போர்ஸ்ன்னு எல்லாத்துலயும் ஈடுபாடோட இருப்பேன். ஸ்போர்ட்ஸ்ல நிறைய அவார்ட்டும் வாங்கி இருக்கேன். காலேஜ்லயும் லீடர்ஷிப்ல இருந்தேன். அங்கேயும் நிறைய ஸ்போர்ட்ஸ்ல கலந்திருக்கேன். அங்கேயும் இண்டர் காலேஜ் காம்படீசன் எல்லாமே கலந்துக்கிட்டு ரொம்ப ஆக்டிவா இருப்பேன். எந்நேரமும் ஸ்டேஜ்ல தான் இருப்பேன். ரிசல்ட்ஸ் வரதுக்கு முன்பே எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு. அப்புறம் வீடு, குழந்தைங்கன்னு லைப் போச்சு. அப்புறம் அப்பா அவங்க கூட பிசினஸ்க்கு ஹல்ப் பண்ண சொன்னாங்க. அப்படி தான் அந்த மாற்றம் நடந்தது.
20-25 வருஷமா அப்பா பிசினஸ் எஸ்.ஐ.சாமி டிரேடிங் அண்ட் பிரைவேட் லிமிடெட் பாத்துட்டு இருக்கேன். அது வந்து எக்ஸ்போர்ட் அண்ட் இன்போர்ட் போர்டிங் ஆப் மீட் ஆஸ்திரேலியா, பிரேசில், நியூசிலாந்து, உருகுவே ஆகிய நாடுகளில் இருந்து வரவழைச்சு மொத்தமாகவும், சில்லறை வியாபாரமாகவும் நடத்திட்டு வந்துட்டு இருக்கோம். இப்போ அதை புதுப்பிச்சு Sis பீரிமியம் மீட்ஸ் பிரைவேட் லிமிடெட்ன்னு மாடர்னய்ஸ் பண்ணி இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
ரீ பிராண்டிங் பொறுத்த வரைக்கும், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ- காமர்ஸ் பண்றது, ஹோம் டெலிவரி பண்றது. இன்னும் மக்களுக்கு போய் சேருகிற வரையில பேஸ்புக், இன்ஸ்டாகிராம்ன்னு நாங்களும் சேன்ஜஸ் பண்ணி இருக்கோம். நான் டீச்சரா இல்லைன்னாலும் கிளாசஸ் சொல்லி கொடுத்திட்டு இருக்கேன். இன்னொரு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கேன். அதுல வந்து இளைஞர்களுக்கு சோஷியல் எதிக்ஸ், இன்டர்வியூல நடந்துக்கொள்ள வேண்டிய விதம், புரோபஷனலா நடந்துக்கொள்கிற விதம் அந்த மாதிரி பல வகுப்புகளை நடத்திட்டு வரேன். நிறுவனங்களுக்கும், ஸ்கூல்களுக்கும் சொல்லி கொடுக்க சொல்லி கேட்டு வராங்க. நிறுவன நெறிமுறைகள், ஆடை அணியும் விதம் இத பத்தியெல்லாம் சொல்லி கொடுக்கிறேன்.
அப்பா இறந்ததுக்கு அப்புறம் தான் டர்னிங் பாயிண்ட். அப்பா இருக்க வரை எல்லாத்தையும் அவங்க பாத்துக்கிட்டாங்க. நாங்க கஷ்டப்பட கூடாதுன்னு எல்லாத்தையும் அவங்க பாத்து பாத்து பண்ணுவாங்க. அப்பா இறந்ததுக்கு அப்புறம் இனிமே எல்லாத்தையும் நம்ம தானே பாக்கணும்ன்னு தோணுச்சு. நண்பர்கள் நிறைய உதவினாங்க. எல்லாத்தையும் புத்தாக்கமாக மாத்துனோம். அந்த நாட்கள் தான் கடினமா இருந்துச்சு. தொடக்கத்தில லிட்டில் இந்தியா ஷாப் கீப்பர்ஸ் ஹரிடேஜ் அசோசியேஷன் தலைவர் திரு.ராஜ்குமார் தான் அதற்கு வரும்படி என்னை அழைச்சாரு. லீசா வந்து லிட்டில் இந்தியா வர்த்தர்கள் & மரபுடைமை சங்கம். அவங்க 2000 லிருந்து இங்கே செயல்பட்டுட்டு இருக்காங்க.
தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு இந்த மாதிரி பெரிய நிகழ்ச்சி மாச முழுசா நடக்கும். 2012ல நிறைய பெண்கள் சொந்த தொழில் பண்ண ஆசையா இருந்தாங்க. ஆனா எப்படி பண்ணனும்ன்னு தெரியாம இருந்தாங்க. அப்ப என் பிரண்ட் சொன்னாங்க ஏன் லேடிஸ்க்கு லீசா விமன்ஸ் விங் ஏன் ஸ்டார்ட் பண்ண கூடாதுன்னு கேட்டாங்க. நான் போய் தலைவர் கிட்ட விமன்ஸ் விங் ஆரம்பிக்கலாமான்னு கேட்டேன். உடனே சரின்னு சொன்னாங்க. தாராளமா செய்யலாமேன்னு சொன்னாங்க. விமன்ஸ் விங்க் வேற மாதிரி நிறைய விசயங்கள கொண்டு வரணும்னு சொன்னேன். 17 ஆண்கள் அங்க அசோசியேஷன்ல இருந்தாலும் முழுசா சப்போர்ட் பண்ணாங்க. விமன்ஸ் விங்ல மாசம் மாசம் நிகழ்ச்சி நடக்கணும்ன்னு சொன்னாங்க. ஒவ்வொரு கான்செப்ட் கொண்டு வந்தோம். நெட்வொர்க்கிங் செஷன் நடத்துனோம். நெட்வொர்க்கிங்ல பிசினஸ் பிரசன்டேசன் இருக்கணும். அதலயும் புரோடக்ட் சர்வீஸ் அண்ட் சேல்ஸ் இருந்தா தான் மத்தவங்க வாங்குவாங்க. இன்ஸ்பிரேசன் ஸ்பீச் இருக்கணும். வேலை முடிஞ்சி வரவங்களுக்கு டின்னர் கொடுக்கணும். எல்லாத்தையும் ஒரே இடத்துல பண்றது தான் நெட்வெர்க்கிங் செஷன்.
அடுத்து விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அப்படி உருவானது தான் 2012ல விமன்ஸ் விங் தனித்துவமா தெரியணும். அப்படி பெண் தொழில் முனைவோர்களுக்கான கமிட்டியா ஆரம்பிச்சது தான் 2012ல ஏஜிஎம் அப்ரூவ் ஆச்சு. அடுத்த 7 ஆண்டுகள்ல 140 நிகழ்ச்சிக்கு மேல நடத்திட்டோம். நிறைய சேலஞ்சஸ் உண்டு. கமிட்டி எல்லாமே பெண்கள். எல்லாருக்கும் குடும்பம், சொந்த தொழில் இருக்கு. அவங்களுக்கு சில ரிஸ்டிக்சன் இருக்கலாம். ஆனா என் கமிட்டி ரொம்ப நல்லா இருந்துச்சு. கமிட்டி உறுப்பினர்கள் வருவாங்க, போவாங்க. ஆனா எப்பவும் பெஸ்ட் கமிட்டியா இருந்துருக்கு. இது நான் மட்டும் உருவாக்குனது இல்லை. எல்லோரோட ஈடுபாடு தான் லீசா விமன்ஸ் கமிட்டி சக்சஸ்.
லீசா, லீசா விமன்ஸ் விங்க்ன்னு தனியா இல்ல. எல்லாம் ஒண்ணு தான். இப்போதைக்கு 400 பேரு இருக்காங்க. வேலை முடிஞ்சாலும் வார இறுதி நாட்கள்ல 70-80 பேர் வருவாங்க. தொடக்கத்துல கமிட்டி உறுப்பினரா சேர்ந்தேன், செக்ரடரியா இருந்தேன். இப்போ வைஸ் பிரசிடன்டா இருக்கேன். லீசா விமன்ஸ் விங்ல நிறுவனர் அண்ட் பிரசிடண்டா இருக்கேன். தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுல உறுப்பினரா இருக்கேன். இடைப்பட்ட காலத்துல சிங்கப்பூர் இந்தியன் அண்ட் காமர்ஸ்ல உள்ள விங்லயும் துணை தலைவியா இருந்தேன். அடித்தள தலைவர்கள்ல நான் வந்து சிட்டிசன் கன்சாலிடேட் கமிட்டி அதாவது அதன் பெரிய பதவி.
இடைப்பட்ட காலத்துல C2E கமிட்டி எமர்ஜென்சி என்கேஜ்மெண்ட்ல வந்து அசிஸ்டெண்ட் செக்ரடரியா இருந்தேன். 5 வருசம் அதுல இருந்தேன். அதே போல அடித்தள தலைவர்கள் டீமுல ரொம்ப ஈடுபாடோட இருந்தேன். நியூஸ் லெட்டர் தயாரிக்க, மக்கள் மினிஸ்டர் கூட போய் சந்திக்கிறதுன்னு இருந்தேன். ரெசிடெண்ட் கமிட்டியே இல்லாம இருந்துச்சு. அந்த சூழலையும் மாத்தினேன். அங்கு ஒரு கமிட்டி உருவாக்கனும்ன்னு வீடு வீடா போய் உருவாக்குனேன். அதன்மூலமா தான் அங்கீகாரம் கிடைச்சு மினிஸ்டர் இன்வைட் பண்ணதால , CCC ல உறுப்பினரா இருக்கேன்.
“அப்பா தான் ஜாய்ஸ்க்கு எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. அவங்க அப்பாவுக்கு ஜாய்ஸ் தான் ரொம்ப பிடிச்ச பொண்ணு. இவ்வளவு டேலண்ட் இருக்கிற பொண்ணு வீட்ல இருக்க கூடாதுன்னு பாத்து பாத்து சொல்லி குடுத்தது அப்பா தான் என்கிறார்”, அவரது கணவர் ஜெகநாதன் கிங்ஸ்லி.
“மனைவி, தாய், சமூக தலைவின்னு எல்லாத்தையும் ஜாய்ஸ் ரொம்ப சரியா பேலன்ஸ் பண்றாங்க “ என்கிறார், சிங்கை தமிழ்ச்சங்கத்தின் சிங்கப்பூர் தலைவர் விஜி ஜெகதீஸ்.
ஜாய்ஸ் பின்னாடி இருந்த குழுவே ரொம்ப சிறப்பா இருந்தாங்க. ஜாய்சுன்னு சரி, லீசா பெண்கள் பிரிவும் தனித்துவமா நடத்தினதா” மெய்சிலிர்க்கிறார், வளர் தமிழ் சங்கத்தின் ஆலோசகர் ராஜாராம்.
“நிறைய உறுப்பினர்கள் இருக்காங்க. ஜாய்ஸை நிறைய பேர் பின்தொடராங்க” என்கிறார், லிஷாவின் தலைவர் ராஜாராம்.
“லீசா விமன்ஸ் விங்க எல்லாரும் பார்த்து பிரமிக்க வைக்கிற அளவுக்கு ஜாய்ஸ் உருவாக்கி இருப்பதாக சொல்கிறார்”, வர்த்தக ஆலோசகர் நாராயண மோகன்.
தமது அயராத உழைப்பால், Sis பிரீமியம் மீட்ஸ் பிரைவேட் லிமிடட்டின் 2வது கிளையை திறந்து வெற்றிக்கரமாக நடத்தி வருவது மட்டுமின்றி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தின் பெண்கள் பிரிவு நிறுவன தலைவராக இன்று வரை 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வரும் ஜாய்ஸ் கிங்ஸ்லி, தனது கணவர் , குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
“கணவர் பெயர் ஜெகநாதன் கிங்ஸ்லி.நான் சொன்னபடி கோயம்பத்தூர்ல இருந்து வந்தவங்க.
கோவையில ரஞ்சனா ஸ்டோர்ஸ்ன்னு சொன்னா தெரியாதவங்கலே இருக்க மாட்டாங்க. அவங்களும் பிசினஸ்ல தான் இருக்காங்க. அவங்க தான் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க. எனக்கு பிடிச்சது செய்ய விடறாங்க. எனக்கு 2 பிள்ளைங்க. மூத்தவ சில்வியா ஸ்ருதி கிங்ஸ்லி, சின்னவ சாண்ட்ரா ஸ்வேதா கிங்ஸ்லி. பல நிகழ்ச்சிகள் பெண்களுக்கு மட்டும் இருந்தாலும், இப்போ நிறைய நிகழ்ச்சிகளை ஆண், பெண்கள் என உருவாக்கி இருக்கோம். இதனால கணவனும், மகளும் நிகழ்ச்சிகள்ல கலந்துப்பாங்க. கல்யாண சமையல் சாதம்ன்னு நிகழ்ச்சி பண்ணோம். அதுல குடும்பமே உற்சாகமா கலந்துக்கிட்டாங்க. எந்த காரியமும் தொடக்கத்தில் கஷ்டமா தான் இருக்கோம். ஆனால் போக போக பிளான் பண்ணி முடியும்ன்னு நினைச்சி பண்ணா, நிச்சயம் பண்ணிடலாம். என்னுடைய அனுபவத்துல தொடக்கத்துல புரியாம தான் பண்ணேன். அப்புறம் கத்துக்கிட்டு பண்ணிட்டேன். அப்படி தான் எல்லாத்தையும் அச்சீவ் பண்ணி இருக்கேன்.
இதையே தான் மத்தவங்களுக்கும் சொல்றேன். பிசினஸ்ல இறங்கும் போது, அவசரப்படாம அதுல விசாரித்து செய்ங்க. டெஸ்ட் மார்க்கெட் பண்ணி, சர்வீஸ் எப்படின்னு, இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி என்ன தேவைன்னு பாத்து பண்ணுங்க என பிசினஸ் டிப்ஸ்களை அள்ளித்தெளிக்கிறார்”, ஜாய்ஸ்.
“அம்மா தான் எங்களுக்கெல்லாம் ரோல் மாடல். வீட்டையும் பாத்துக்கிட்டு, சமூகத்துக்கு தேவையான விசயங்களையும் செய்றாங்க என நெகிழ்கிறார்”, அவரது இளைய மகள் சாண்ட்ரா ஸ்வேதா கிங்ஸ்லி.
“ஜாய்ஸ் ஒவ்வொரு விசயம் பண்றது எங்களுக்கு வியப்பை தான் தந்திருக்கிறதாக சொல்கிறார்”, மக்கள் கவிஞர் மன்றத்தின் தலைவர் புவனேஸ்வரி மகேந்திரன்.
“போன் பண்ணி டவுட் கேட்டாலும், உடனே ஹெல்ப் பண்ணுவாங்க. நம்பர் தெரியலைன்னாலும் யாருகிட்டயாவது வாங்கியாவது கொடுத்திடுவாங்க என்கிறார்”,எழுத்தாளரும், தொழில்முனைவோருமான பிரேமலதா மகாலிங்கம்.
“ஜாய்ஸ் பெண்களுக்காக குழு அமைத்து பெண்கள் வியாபாரம் செய்ய என்னென்ன உதவி தேவையோ, அதையெல்லாம் செய்து கொடுக்கிற அமைப்பு வைச்சி நடத்திறாங்க. எல்லாம் வெற்றிக்கரமா போய்க்கிட்டு இருக்கு” என பதிவு செய்து இருக்கிறார்”, மறைந்த பிரபல விஜே ஆனந்த கண்ணன்.
“டிரைனிங் கேம்ஸ், இன்னோவேட்டிவா எதாவது ஜாய்ஸ் செஞ்சிட்டே இருப்பாங்க. குடும்பத்தையும் பாத்துக்கிட்டு, வெளியேயும் ஆக்டிவா இருப்பாங்க. அவங்களை பாத்து வியக்கிறேன். பெருமைப்படுகிறேன் “ என்கிறார், ஆர்டிஸ்ட் சசிகலா ஆனந்த்.
“பிசினஸ்ல உடனே லாபம் வராது. ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க. பிளானிங் ரொம்ப முக்கியம். இதை எதுவும் செய்யாமல் பிசினஸ் பத்தி யோசிக்காதீங்க என்கிறார், சக்சஸ் விமன் ஜாய்ஸ் கிங்ஸ்லி.
(Source – Puthuyugam)