சிங்கப்பூரில் தோ பாயோ என்ற இடத்தில் உள்ள CHIJ என்ற உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அந்த பள்ளி முழுமைக்கும் தற்போது வீட்டில் இருந்து கல்வி பயிலும் முறை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கள்கிழமையன்று அந்த மாணவி இறுதியாக பள்ளிக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. மேலும் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கல்வி பயிலும் முறை அமலுக்கு வந்துள்ளது.
அந்த மனைவிக்கு குடும்ப உறுப்பினர்கள் மூலமாக தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஜூரோங் கிளஸ்ட்டர் மூலம் பரவிய தொற்று எண்ணிக்கை என்பது மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனால் நாட்டில் தற்போது பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.