TamilSaaga

“சிங்கப்பூரில் குறையும் தினசரி தொற்றின் அளவு” – Dormitoryகளில் மேலும் 306 பேருக்கு தொற்று உறுதி

சிங்கப்பூரில் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 11) நண்பகல் நிலவரப்படி 2,263 புதிய பெருந்தொற்று வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் வைரஸால் மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனையடுத்து தீவில் இரண்டாவது நாளாக 3000-க்கும் குறைவாக தொற்று பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “பெருந்தொற்று வழக்குகளைப் பற்றி புகாரளிப்பதற்காக பகல் 12 மணி நேர கட்-ஆஃப் காரணமாக என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள், இதில் ஏழு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர். அவர்கள் 73 மற்றும் 93 வயதிற்குட்பட்டவர்கள் என்று MOH அதன் தினசரி வெளியீட்டில் நேற்று இரவு 11.40 மணியளவில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில், நான்கு பேர் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை, மூன்று பேருக்கு ஓரளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்றும் மூன்று பேருக்கு தடுப்பூசி முழுமையக போடப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன.

இது சிங்கப்பூரில் பெருந்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை 172 ஆக உயர்த்தியுள்ளது. புதிய வழக்குகளில், 2,255 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவுகின்றன, இதில் சமூகத்தில் 1,949 மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் 306 உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த எட்டு பேருக்கு தொற்று உறுதியானதாக MOH தெரிவித்துள்ளது. தொற்று பரவல் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டில் 1,29,229 பேருக்கு தொற்றுபதிவாகியுள்ளது.

தடுப்பூசி போடப்படாத 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அக்டோபர் 19 முதல் சிங்கப்பூர் செல்லலாம் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) திங்களன்று தெரிவித்துள்ளது.

Related posts