சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். சூழ்நிலைகளால் உதவிப் பெற்றறுப் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் தனது அறிவுத்திரத்தாலும் அயராத உழைப்பாலும் தான் நம்பும் பழனி முருகனின் அருளாலும் தன் மனைவியின் துணையோடும் தொட்ட துறைகள் அனைத்திலும் முத்திரைப் பதிப்பவர் தான் திரு.வி.ஆர்.அழகப்பன் அவர்கள். சிங்கப்பூர் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், சரவணா டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், சரவணா கேஷ் மற்றும் கேரி ப்ரைவேட் லிமிட்டட், சரவணா புட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட், சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் ப்ரைவேட் லிமிட்டட், டேஸ்ட் ஆப் இந்தியா ப்ரைவேட் லிமிட்டட், சங்கிதா பவன் ரெஸ்டாரன்ட் ப்ரைவேட் லிமிட்டட், பெங்களூர் அய்யங்கார் பேக்கரி ப்ரைவேட் லிமிட்டட், ட்யூப் மால் எக்ஸ்போர்ட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் மற்றும் இந்தியாவில் AKOK புட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் என பல்வேறு தெழில்களில் சிறந்து விளங்குகிறார் திரு.வி.ஆர்.அழகப்பன்.
திரு.வி.ஆர்.அழகப்பன் அவர்கள் கூறியது “நான் பொறந்தது பெரியப் பணக்கார வீடு, புதையல் எடுத்து அதுல கட்டுன வீடு என்பதால புதையல் எடுத்த மாணிக்கச் செட்டியார் வீடுனு தான் பெயர்.இன்னைக்கும். அது கொஞ்சம் இருக்கு. அந்தப் புதையல் எடுத்து பெரிய 64 அறை கொண்ட பங்களா கட்டுனாங்க. அந்த வீட்டில் செல்வாக்கா இருந்ததால் எங்க அப்பாவும் தாத்தாவும் வேலைக்குப் போகல. இருக்குறத எல்லாப் பணத்தையும் அவங்க செலவுப் பண்ணதால நான் வாழ்க்கையில முக்கியமான கட்டத்துக்கு வரும் போது வீட்டில் ஒன்னும் இல்லை. அப்போ தான் வெளி ஆட்களோட தயவுகளை எதிர்பார்த்து படிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.
நான் தேவக்கோட்டையில் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். படிப்பு முடிச்சதும் எங்க தாத்தா இறந்ததால் அரியலூரில் இருக்க எங்க அம்மாவோட அப்பா வீட்டுக்கு போகும் நிலை வந்தது. அங்க போன பிறகு படிக்கனும் என்று ஆசை ஆனா உதவிப் பண்ண யாரும் இல்லை. அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருக்க எங்க சித்தப்பா டாக்டர். கருணாநிதி நான் பணம் தரேன் நீ படினு சொன்னதால் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து முதல் இடத்துல தேர்ச்சிப் பெற்றேன். அப்போ எங்க அம்மா வழி தாத்தா கிட்ட நான் எங்க இடம் ஒன்னு இருக்கு அத வித்துட்டாவது எங்களுக்கு உதவி பண்ணுங்கன்னு சொன்னதால அவங்க மாசம் 300 ரூபாய் பணம் அனுப்பி உதவி செய்தாங்க. நான் அவங்க உதவியால் பட்டய கணக்காளர் படிப்புக்கு படித்து தகுதி அடிப்படையில் தேர்ச்சி பெற்று வந்தேன்.
பிறகு சிங்கப்பூரில் இருக்க சித்தி ஆதரவால் இந்த நாட்டுக்கு வந்தேன். அந்த காலத்துல இங்க எனக்கு அரசாங்க வேலை எளிமையா கிடைத்தது. முதலில் ராமா அன்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அந்த கம்பெனி முதலாளி சிவன் இறந்ததால அந்த கம்பெனி எடுத்து நடத்த யாரும் இல்லை அப்போ நானும் எம்ப்லாய்மென்ட் பாஸ் தான் வச்சிருந்தேன்.அடுத்து நான் மக்கள்நல் கம்பெனியில் ராமானுஜம் என்பவர் கிட்ட சேர்ந்தேன். அப்புறம் அரசு சார்ந்த கம்பெனி சாட்டர்னில் 12 வருஷம் வேலைப் பார்த்த பின் சிஷில்ஸில் இருந்து கேடிப்பில்லை என்பவர் அறிமுகமானார் அவர் வேலைக்கு நல்ல ஆள் வேணும் என்றும் வியாபாரத்துக்கு பொருள் வாங்கி அனுப்பனும் நாங்கேள இடம் பணம் எல்லாம் குடுப்பதாக சொன்னார் பகுதி நேர வேலையாக என் மனைவியை பண்ண சொல்லி கேட்டார்.நான் 5% தரகு கேட்டேன் ஆனல் அவர் 3% தருவேன் சொன்னதால் வேலைக்கு ஆள் சேர்த்து விடுரேனு சொல்லி நான் விலகிட்டேன்.
பின் 2 மாசம் கழித்து 5% தரோம் நீங்களே பண்ணுங்கன்னு சொன்னதால நாங்க ஏற்றுமதி பண்ண ஆரம்பித்தோம்.ஒன்னு பண்ண ஆரம்பித்து 7 கன்ட்டேய்னர் வரை பொருள் வாங்கி அனுப்பினோம். அப்புறம் அவரே மத்த கடைக்கும் நீங்களே அனுப்புங்க நானே பணம் தரேன்னு சொன்னார்.இந்த வாய்ப்பு இருக்கப்போ ஏன் விடனும்னு வேலையை விட்டுட்டு எல்லாருக்கும் ஏற்றுமதி பண்ண ஆரம்பித்தோம் ஓரளவு நல்லா போய்கிட்டு இருக்ப்போ நம்ம சுயமா கடை வைக்கலாம்னு ஆரம்பித்தேன்.அடுத்து கல்யாணம் பண்ண கொஞ்சம் காசு சேமித்து இந்தியாவுல போயி கல்யாணம் முடித்து சிங்கப்பூர் வந்தேன்.திரும்ப உடனடியா இந்தியா செல்ல முடியாதுன்னு அதுக்கு கொஞ்சம் பணம் சேமிக்கனும்னு இப்படி இரண்டு மூன்று தடவை சிங்கப்பூரிலே இருக்கும் நிலமை ஆகி பின் சிங்கப்பூர் citizen ஆக மாறிவிட்டேன்.அப்போ எனக்கு சம்பளம் குறைவு தான் ஒரு முன்னூறு நானூறு வெள்ளியில் தான் குடும்பத்தை நடத்துற மாறி இருந்துச்சி அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி ஆதரவால் கடையை நடத்தினேன்”.
அவர் மனைவி விசாலாட்சி அழகப்பன் கூறியது “என் கணவர் எதுவுமே இல்லாமல் வந்தாலும் அவங்களுக்கு நல்ல திறமை இருக்கு உழைப்பு இருக்கு. அவங்க எங்க குடும்பத்துல ரொம்ப நெருங்கி இருக்கனும்னு நினைக்க மாட்டாங்க வேலை ஆட்களோட தான் நேரம் செலவு செய்யனும் நினைப்பாங்க. அயராத உழைக்கும் திறமை வாய்ந்தவர்”. ஏ.சந்திரன் (ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் மற்றும் துணை ஜனாதிபதியாக பணியாற்றியவர்) கூறியது” அழகப்பன் அவர்கள் நல்லா உழைப்பவர் நிறைய சிந்திப்பவர். பல தொழில் செய்தும் புதுசா என்ன பண்ணலாம்னு சிந்திச்சிக்கிட்டே இருப்பார்”.மீண்டும் திரு.வி.ஆர்.அழகப்பன் அவர்கள் தன் வாழ்க்கையின் திருப்புமுனை எனக் கூறியது”ஒரு முறை டெல்லியில் உள்ள சப்ளையர் 52 கன்ட்டெய்னர் அரிசியை துபாய்க்கு அனுப்பிடாங்க.அனுப்பிய பின் தான் இந்தியாவிலுள்ள அரிசியை ஏற்றுமதி செய்யக் கூடாதுன்னு சட்டம் போட்டாங்க அப்போ எந்த கடைக்கும் அரிசி வரல அது ஒரு வருஷம் பெரிய திருப்புமுனையாக இருந்தது”.
மேலும் பல கோடிகளுக்கு மேல் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும் அனைவர் இடத்திலும் எளிமையாகப் பழகும் திரு.அழகப்பன் அவர்கள் ஆன்மிக பணிகளையும் சேவையாக தொடர்ந்து செய்து வருகிறார்.கடந்த 20 வருடமாக பழனியில் தைப்பூசத் திருநாளின் போது 24 மணி நேர உணவு வழங்கும் பணியையும் மேற்க்கொண்டு செய்து வருகிறார்.
News Source : Puthuyugam Channel