தற்பொழுது நாடு திரும்பும் சிங்கப்பூரர்கள் பள்ளியில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை நாளையிலிருந்து சமர்ப்பிக்கலாம் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி அல்லது மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் அடுத்தாண்டு சேரவிரும்பும் மாணவர்கள் தற்போது கல்வி அமைச்சகத்தின் இணையத்தில் அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
ஆண்டு இறுதியில் வெளிநாட்டில் பணியாற்றும் சிங்கப்பூரர்கள் நாடு திரும்பும்போது தங்கள் பிள்ளைகளை உள்ளூர் பள்ளிகளில் சேர்க்க SPERS எனும் திட்டம் வழிவகுக்கிறது.
உயர்நிலைப்பள்ளிகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரை சேர விரும்பும் சிங்கப்பூர் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
மேலும் தொடக்க கல்லூரியிலும் கல்வி நிலையத்திலும் சேரவிருக்கும் சிங்கப்பூர் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்