TamilSaaga

“சபாஷ் சின்னையா பிரபு” – சிங்கப்பூரில் தனது சகாக்களுக்கு உதவும் வகையில் “சிறப்பு நூலகம்” தொடங்கியவருக்கு விருது

சிங்கப்பூரில் தன்னுடைய சில சகாக்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள அறிவுறுத்தல்களைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தபோது, ​சிங்கப்பூரில் உள்ள ​பொறியியல் ஆலோசனை நிறுவனமான ROCயின் உதவி பாதுகாப்பு மேலாளர் திரு. சின்னையா பிரபு அவர்கள், அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். திரு சின்னையா பிரபு அவர்கள் சொந்த மொழிகளில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பொருட்களை எளிதில் அணுகுவதற்காக பாதுகாப்பு நூலகங்களைத் தொடங்கினார்.

இந்த நூலகங்கள், அவருடைய ஆங்கிலம் பேசாத சக ஊழியர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் தங்கள் அறிவை மேம்படுத்த உதவி வருகின்றது. அதே நேரத்தில் அவர்கள் படிக்கவும் ஓய்வெடுக்கவும் இது ஒரு இடத்தை வழங்குகிறது.

36 வயதான திரு. சின்னையா பிரபு அவர்களின் முயற்சிகளுக்காக, சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்த அவருக்கு கடந்த ஜூலை 29 வியாழக்கிழமை bizSAFE Champion விருது வழங்கப்பட்டது. இந்த விருது அவர்களின் நிறுவனங்களின் இடர் மேலாண்மை திறன்களை உயர்த்துவதில் முனைப்புடன் செயல்படும் நபர்களை அங்கீகரிக்கிகரித்து அளிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் பேசாத முடியாத சக பணியாளர்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை புரிந்து கொள்ள, திரு. சின்னையா பிரபு நூலகங்களைத் தொடங்கினார். அங்கு அவர்கள் பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பொருட்களை அவர்களின் சொந்த மொழிகளில் எளிதாக அணுக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts