சிங்கப்பூரில் கடந்த வாரம் சனிக்கிழமை (ஜூலை 30) Towner சாலையில் உள்ள வீட்டுவசதி வாரியத் திட்ட தளத்தில் மண் கலவை இயந்திரம் ஒன்று அதன் Mast சேதமடைந்த நிலையில் முறிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mast என்பது பெரிய இயந்திரங்களை தாங்கி நிற்கும் தூண் போன்ற ஒரு அமைப்பாகும், காலை 9.30 மணியளவில் பணியாளர்கள் பலர் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் நடந்த இந்த பணியிட விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மனிதவள அமைச்சகம் (MOM) ஊடங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தது.
பணியிட விபத்தின் புகைப்படங்கள்
எல்&எம் அறக்கட்டளை நிபுணரால் பணியமர்த்தப்பட்ட மூன்று தொழிலாளர்கள் கொண்ட குழு குறிப்பிட்ட அந்த இயந்திரத்தை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதன் MAST கழன்று விழுந்தது, என்றும் MOM வெளியிட்ட தகவலில் கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த விபத்தின் புகைப்படங்கள், ஹீ ஜான் கட்டுமானத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பணித் தளத்தைச் சுற்றியுள்ள சில உலோகத் தடைகளையும் இடிந்த கொண்டு அந்த மாஸ்ட் விழுந்ததை காட்டுகிறது.
மாஸ்ட்டின் பெரும்பகுதி கட்டுமான இடத்திற்கு வெளியே சாலையில் சிதறிக் கிடப்பதையும் காணமுடிந்தது, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.