Social visit Pass: சிங்கப்பூரில் வேலை பார்க்க ஆசைப்படும் பலருக்கும் பல குழப்பங்கள் இருக்கும். எந்த பாஸில் வேலைக்கு செல்லலாம். இதில் எத்தனை லட்சம் செலவாகும் என செம சந்தேகங்கள் கூட இருக்கும். உங்களுக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சிங்கப்பூரில் வேலையே இல்லாமல் கூட நேரடியாக வந்து டெஸ்ட் அடிக்க முடியும். எப்படினு தெரிந்துக்கணுமா இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Social visit Pass என்றால் என்ன:
சிங்கப்பூரில் வேலைக்காக பல பாஸ்கள் புழக்கத்தில் இருக்கிறது. PCMல் தொடங்கி அதிக சம்பளத்தினை கொடுக்கும் EPass வரை. இது குறித்து பலருக்கும் பெரும்பாலான தகவல்களும் தெரியும். ஆனால் Social visit பாஸ் குறித்து பலரும் தெரிந்து கொள்ள மிஸ் செய்து இருப்பார்கள்.
இதையும் படிங்க: Agents-களிடம் போகாமல் சிங்கப்பூருக்கான ‘S Pass’ அப்ளை செய்வது எப்படி? சிம்பிள் வழி இதோ!
இந்த பாஸ் முழும் நீங்கள் சிங்கப்பூர் வந்து எந்த வேலையும் இல்லாமல் கூட இங்கு வந்து Skill டெஸ்ட் அடித்து விட முடியும். உங்களுக்கு சரியான வாய்ப்பு அமைந்தால் வேலைக்கு கூட அந்த இடைப்பட்ட நாட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. சில நிறுவனங்கள் உங்களை வேலைக்கு எடுத்து விட்டும். நேரடியாக டெஸ்ட் அடிக்க அழைத்து வருவார்கள். இதற்கு கம்பெனிக்கு levy கட்டணம் குறையும் என்பதற்கே இந்த ஏற்பாடு.
Social visit பாஸிற்கு தேவையான ஆவணங்கள்
NTS எனப்படும் non-traditional sources நாட்டில் இருந்து டெஸ்ட் அடிக்க சிங்கப்பூர் வருபவர்களுக்கு சில டாக்குமெண்ட்கள் முக்கியமாக கேட்கப்படும்.
*மேல்முறையீட்டு கடிதத்தில் தொழிலாளர்கள் சிங்கப்பூருக்குள் வர இருக்கும் காரணம், தொழிலாளர்களின் எண்ணிக்கை, எந்த துறையில் டெஸ்ட் மற்றும் அவர்கள் வேலை விவரம் கம்பெனியிடம் இருந்து இருக்க வேண்டும்.
*quota லெட்டர்,
*கல்வி தகுதி சான்றிதழ்கள்,
*விண்ணப்பவரின் பாஸ்போர்ட்
18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மட்டும் இந்த வகையில் வந்து டெஸ்ட் அடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் S-Pass விண்ணப்பிப்பது எப்படி? : தேவையான ஆவணங்கள் என்ன? – Detailed Report
Social visit பாஸில் சிங்கப்பூர் வந்து 14 முதல் 30 நாட்கள் தங்க முடியும். 30 நாளில் இருந்து 89 நாட்களுக்கு நீட்டித்தும் கொள்ள முடியும். Construction Safety Orientation Course (CSOC) முடித்து விட்டு தான் தொழிலாளர்கள் SEC(K) testல் கலந்து கொள்ள முடியும். CSOC தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே SEC(K) தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தியர்கள் இப்படி டெஸ்ட் அடிக்க முடியுமா?
இந்த Social visit பாஸில் வந்து சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் உங்கள் நாட்டில் அதிகாரப்பூர்வ டெஸ்ட் மையம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் இந்த பாஸில் வந்து டெஸ்ட் அடிக்க முடியும். இதனால் மாநிலங்களில் பலவற்றில் நிறைய மையங்கள் கொண்ட இந்திய ஊழியர்களுக்கு இந்த பாஸில் சிங்கப்பூர் வந்து டெஸ்ட் அடிக்க சாத்தியமே இல்லை.