சிங்கப்பூர்: புனித வெள்ளி மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படுவதாக SMRT நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படவுள்ள புனித வெள்ளிக்கு முந்தைய இரவு (ஏப்ரல் 17) மற்றும் தொழிலாளர் தினத்துக்கு முந்தைய இரவு (ஏப்ரல் 30) ஆகிய இரு தினங்களிலும் நள்ளிரவுக்குப் பிறகும் பொதுமக்கள் பேருந்து மற்றும் ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று SMRT தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடைசி ரயில் சேவைகள்:
சிட்டி ஹால் நிலையத்திலிருந்து பின்வரும் இடங்களுக்குச் செல்லும் கடைசி ரயில் சேவைகள் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும்:
🚄 மரினா சௌத் பியர் (Marina South Pier)
🚄 ஜூரோங் ஈஸ்ட் (Jurong East)
🚄 பாசிர் ரிஸ் (Pasir Ris)
🚄 துவாஸ் லின்ங் (Tuas Link)
கடைசி பேருந்து சேவைகள்:
பின்வரும் வழித்தடங்களில் செல்லும் கடைசி பேருந்து சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் புறப்படும்:
- சுவா சூ காங் செல்லும் பேருந்துகள் (300, 301, 302, 307, 983A): பின்னிரவு 1.40 மணி
- உட்லண்ட்ஸ் மற்றும் புக்கிட் பாஞ்சாங்கிலிருந்து வரும் சில பேருந்துகள்: பின்னிரவு 1.25 மணி
- பூன் லேயிலிருந்து வரும் பேருந்து: பின்னிரவு 1.20 மணி
இந்த நீட்டிக்கப்பட்ட நேர அட்டவணை பொது மக்கள் விடுமுறை நாட்களின் முந்தைய இரவுகளில் தங்களது பயணங்களை எளிதாக திட்டமிட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவலுக்கு: SMRT Facebook பக்கத்தை பார்வையிடவும்.
தீயில் துணிந்த வீரர்கள்: குழந்தைகளைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள்!