சிங்கப்பூரில் இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் நவம்பர் 30 வரை, பெருந்தொற்று தடுப்பூசிகளுக்கு மூத்தவர்களைப் பரிந்துரைக்கும் நபர்களுக்கு சுகாதார மேம்பாட்டு வாரியத்திலிருந்து (HPB) 30 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களைப் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூரின் Health Promotion Board வெளியிட்ட ஒரு முகநூல் பதிவில், HPB தடுப்பூசி போடுவதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தங்களின் ஆதரவை வழங்குபவர்கள் ஒவ்வொரு வெற்றிகரமான குறிப்பிற்கும் 30 வெள்ளி மதிப்புள்ள HPB eVoucher களைப் பெறலாம் என்று கூறியது.
இது அப்படி செயல்படுத்தப்படும்..
முதலில் தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதியவரிடம் நீங்கள் பேசவேண்டும். கோவிட் -19 தடுப்பூசி பெறாத அந்த 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், அவருக்கு தடுப்பூசி போட ஊக்குவிக்கவும். அவர்களின் தடுப்பூசியைப் பெறுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள், ‘எங்கள் மூத்தவர்களுக்கு தடுப்பூசி போடுவோம்’ திட்டத்தின் மூலம், முன் பதிவு படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
அடுத்த 1 முதல் 2 நாட்களில் ஒரு உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் உங்களுக்கு அனுப்பப்படும். இதனை அடுத்து நீங்கள் 30 வெள்ளி சலுகையை பெறலாம்.