TamilSaaga

சிங்கப்பூரில் புதிய ரயில் பாதைகள்: மக்களுக்கு பயண நேரம்  குறைப்பு…… MRT அறிவிப்பு

சிங்கப்பூரின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், ‘தெங்கா பாதை’ என்ற புதிய எம்ஆர்டி ரயில் பாதையின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது. இந்த புதிய எம்ஆர்டி பாதை தெங்கா, புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே, புக்கிட் மேரா போன்ற பகுதிகளை இணைக்கும்.

தெங்கா பாதை: ‘தெங்கா பாதை’ திட்டத்தில் தெங்கா, புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே, புக்கிட் மேரா ஆகிய பகுதிகள் அடங்கும். இது எம்ஆர்டி ரயில் விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாகும்.

சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில் விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக, இரண்டு புதிய ரயில் பாதைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதில் ஒன்றுதான் தற்போது ‘தெங்கா பாதை’ என்று அழைக்கப்படும் திட்டம். இது சிங்கப்பூரின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் சேவையளிக்கும்.

இந்தத் திட்டங்கள் குறித்த தகவல்கள், மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் அவர்களால் வெளியிடப்பட்டன.

இரண்டு பாதைகள்:

  • ‘தெங்கா பாதை’ மற்றும் ‘சிலேத்தார் பாதை’ ஆகிய இரண்டு புதிய ரயில் பாதைகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • தெங்கா பாதை தெங்கா, புக்கிட் பாத்தோக், குவீன்ஸ்வே, புக்கிட் மேரா போன்ற வட்டாரங்களை இணைக்கும்.
  • சிலேத்தார் பாதை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் தொடங்கி செம்பவாங், செங்காங் வெஸ்ட், சிராங்கூன் நார்த், வாம்போ, காலாங் வட்டாரங்களைக் கடந்து சென்று எதிர்காலத்தில் அமையவுள்ள கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் முடிவுறலாம் என்றார் திரு சீ.

சிங்கப்பூரில் ஆராயப்படும் தெங்கா மற்றும் சிலேத்தார் எம்ஆர்டி பாதைகள், எதிர்காலத்தில் கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட் பகுதியில் சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் Hume MRT நிலையம் திறக்கப்பட்டது: பயணம் இனி இன்னும் சுலபம்…. ஆர்வத்துடன் திரண்ட மக்கள்!!

இரண்டு பாதைகளையும் ஒரே பாதையாக இணைக்கும் சாத்தியம் குறித்தும் தற்போது ஆய்வு நடக்கிறது. இதனால், சிங்கப்பூரின் எம்ஆர்டி பாதைகளின் எண்ணிக்கை 2040களில் அதிகபட்சமாக 10 ஆக உயர்ந்து தீவை முழுவதும் குறுக்கிட்டுச் செல்லும் திறனுடன் இருக்கும். தற்போதைய எம்ஆர்டி பாதைகளின் எண்ணிக்கை ஆறாக உள்ளதாம்.

ஜூரோங் வட்டாரப் பாதையைத் தெற்கு நோக்கி நீட்டித்து வட்டப்பாதையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹோங் டாட் அறிவித்தார். இந்தத் திட்டம் முதன்முதலில் முன்மொழியப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தத் திட்டம் ‘வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்புத் திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் இணைப்புத்தன்மையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஜூரோங் வட்டாரப் பாதையின் பாண்டான் ரெசர்வார் நிலையம், குறுக்குத்தீவுப் பாதையில் அமையவுள்ள வெஸ்ட் கோஸ்ட் நிலையத்துடன் 2030-களின் பிற்பகுதியில் இணைக்கப்படும். வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்பின் மூலம் மேற்குப் பகுதியிலிருந்து மத்திய நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

வெஸ்ட் கோஸ்ட் நீட்டிப்பு திட்டத்தின் மூலம், மேற்குப் பகுதியிலிருந்து மத்திய நகர்ப்பகுதிக்குச் செல்லும் பயண நேரம் 20 நிமிடங்கள் குறையும் என போக்குவரத்து அமைச்சர் திரு சீ ஹொங்க் டாட் தெரிவித்தார்.

இந்த திட்டம், பயணிகளுக்கு மாற்றுப்பயணத் தேர்வுகளை வழங்குவதுடன், எம்ஆர்டி ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த மீள்திறனை (efficiency) மேம்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts