சிங்கப்பூர் மட்டுமல்ல உலக அளவில் Hari Raya Aidilfitri பண்டிகை என்பது பொதுவாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வீடுகளுக்குச் சென்று கொண்டாடப்படுகிறது. தங்களுக்கு அன்புக்குரியவர்களுடன் இணைந்து ஒன்றாக கொண்டாடுவதே சிறந்த பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு நபர் இந்த Hari Raya Aidilfitri பண்டிகையை தனது குடும்பத்துடன் மட்டும் இணைந்து கொண்டாடாமல் சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடனும் ஹரி ராயாவின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத் முடிசெய்துள்ளார்.
இதனையடுத்து கடந்த மே 4ம் தேதி தனது மகனின் TikTokல் இதுகுறித்த ஒரு பதிவை பகிர்ந்து கொண்டார், மேலும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட சுமார் 1,87,000 பார்வைகளை பெற்றது அந்த வீடியோ. அந்த டிக்டாக் பயனரின் தந்தை, ஹரி ராயாவின் முதல் நாளைக் கொண்டாடுவதற்காக, வங்கதேசத் தொழிலாளர்கள் மற்றும் தனது சக சீன ஊழியர்கள் குழுவைத் தங்கள் வீட்டிற்கு அழைத்தார்.
சிறப்பு விருந்தினர்களை வரவேற்பதற்காக அவருடைய இல்லம் தயார் நிலையில் இருந்தது. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அந்த குடும்பத்தினரின் அன்பான விருந்தோம்பலுடன், உணவு மற்றும் பானங்களை உண்டு குடித்து மகிழ்ந்தனர்.
வீட்டுக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அந்த குடும்பத்திற்காக உணவு, பானங்கள் மற்றும் பழங்களை எடுத்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் அளித்தது. உண்மையில் தங்கள் சொந்தங்களை தனியே விட்டுவிட்டு இங்கு வந்த உழைக்கும் தொழிலாளர்களுக்கு அது மிகவும் ஆறுதல் மிக்க தருணம் என்று தான் கூறவேண்டும்.
TikTok பயனர்கள் பலர் அவரது தந்தையின் கருணையான செயலை வெகுவாக பாராட்டினர், அவர் அவ்வாறு செய்தது இனிமையான ஒன்று என்றும் சிலர் மேற்கோள்ளிட்டு காட்டினர். சிலர் அந்த மனிதனின் செயல் தங்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
உண்மையில் தங்கள் சொந்தங்களை பிரிந்த வாழும் நமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷமாக இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.