சிங்கப்பூரில் Shopee தளத்தில் வாங்கப்பட்ட ஐபோனுக்கு பதில் ஆர்டர் செய்யப்பட்ட பொருளால் கடுப்பாகிய சம்பவம் வைரலாகி இருக்கிறது.
சிங்கப்பூரினை சேர்ந்த யூ என்பவர் ஆப்பிள் ஐபோனை அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை தான் வழக்கமாக வைத்திருந்தார்.
இருப்பினும், ஆன்லைன் ஷாப்பிங் தளம் $8 சிங்கப்பூர் டாலருக்கு வவுச்சர் மற்றும் கேஷ்பேக் வழங்கியதால், இந்த முறை Shopee இலிருந்து $1961 சிங்கப்பூர் டாலருக்கு ஐபோனை ஆர்டர் செய்ய முடிவு செய்தார். இது இந்திய மதிப்பில் 1.2 லட்சமாக மதிப்பிடப்படுகிறது.
அதன் ரிவியூவில் நிறைய போன்கள் விற்று இருந்ததாக கூறப்பட்டு இருந்தது. ரேட்டிங் மற்றும் ரிவியூக்களை பார்த்தவர் ஐபோன் 14 ப்ரோ மாக்ஸ் (256 ஜிபி) ஆர்டர் செய்து விட்டு அதற்காக காத்திருந்து இருக்கிறார்.
டிசம்பர் 31, 2022 அவரின் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. டெலிவரி செய்தவர் பார்சலை கொடுத்து விட்டு புகைப்படம் எடுத்து கொண்டு கிளம்பி விட்டார். யூ விரைவாக கார்டன் பாக்ஸை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சியே காத்திருந்ததாம். காற்று நிரப்பட்ட ப்ளாஸ்டிக் பேக் மற்றும் ஒரு மரக்கட்டை தான் அதனுள் இருந்ததாம். ஐபோனின் அட்டை கூட இல்லை எனக் கூறியிருக்கிறார்.
இதை தொடர்ந்து யூ shopee கஸ்டமர் கேருக்கு கால் செய்து தனது புகாரை தெரிவித்து ரிவெண்ட் கேட்டு இருக்கிறார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருந்ததாம். ஆர்டர் குறிக்கப்பட்ட முகவரியில் டெலிவரி செய்யப்பட்டது. பேமண்ட்டும் விற்பனையாளருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
யூ மீண்டும் தனது பாக்ஸினை செக் செய்ய ஒரு இடத்தில் அட்டை திறக்கப்பட்டு டேப் ஓட்டப்பட்டு இருந்ததை கவனித்தார். டெலிவரி நேரத்தில் தனது ஐபோனை யாரோ திருடி இருப்பதாக போலீஸில் புகார் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறாராம். shopeeல் விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் யூசருக்கு டெலிவரி செய்யப்படவில்லை என்றால் இரண்டு மடங்காக கொடுக்கப்பட வேண்டும் என்பது shopee விதி என்கிறார் யூ.
இதை தொடர்ந்து shopee தரப்பில் இது குறித்து விசாரிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட Shopee பயனருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மேலும் இந்த மோசமான அனுபவத்திற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளோம். ஐபோனிற்கான முழு பணத்தினையும் அவருக்கு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.