சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்கள் அதிகம் ஆசைப்படுவதே போதுமான சம்பளம் கிடைத்து குடும்பத்தின் பொருளாதாரத்தினை சரி செய்து விட வேண்டும் என்பதே. அந்த ஆசையில் கொஞ்சமாவது இந்த வருடத்தில் நடந்து விடும் என்பது தான் சமீபத்திய சூப்பர் தகவல்களாக இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது, சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் 2023ல் அதிக சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம் என்று லிங்க்ஸ் இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு 20% வரை செல்லக்கூடும். மேலும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இருக்கும் சிறப்பான ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: இழந்த இளமைக்காலம்… 17 வருடமாக தமிழகம் செல்லாமல் உழைத்த மாரிமுத்து… சிங்கை பாஸ் கலந்து கொண்ட வைரல் திருமணம்… ஏன் அத்தனை ஸ்பெஷல் தெரியுமா?
இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வினை வழங்கவும் அவர்கள் தயாராக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், நிறுவனம் அதன் உள்ளூர் ஊழியர்களின் பணியமர்த்தலை மேலும் வலுப்படுத்த, வொர்க் பெர்மிட்களுக்கான தேவைகளை கடுமையாக்கியது. இதில் EPassம் அடக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
லிங்க்ஸ் இன்டர்நேஷனலின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறந்த ஊதியத்தை உறுதி செய்வதோடு உள்ளூர் வேலையின்மை விகிதங்களைக் குறைக்க உதவும் என்றார். மேலும் இந்த அறிக்கையின் அடிப்படையில், சிங்கப்பூரின் நீண்ட கால வேலையின்மை விகிதத்திலும் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: என்னத்தான் ஆச்சு சிங்கப்பூருக்கு… தொடர்ந்து மூடப்படும் பலவருட கடைகள்… முதுமையிலும் போராடியவர்களின் திடீர் முடிவின் பின்னணி
ப்ரோபஷனல்ஸ், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMETs) மற்றும் PMET அல்லாதவர்களுக்கு 2022ல் முறையே 0.5% மற்றும் 0.7% ஆண்டுக்குக் குறைந்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது.
இந்த வருடத்தில் சிங்கப்பூர் வேலை கிடைத்து வருபவர்களுக்கு உண்மையிலேயே இது நன்றாக அமையும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.