இதுபோன்றதொரு நிலைமை நம் எதிரிக்கும் வரக்கூடாது.
ஆம்! சிங்கப்பூரில் இரத்தப் புற்றுநோயால் Kelly Fan என்ற பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு உதவும் பொருட்டு அவரது சிகிச்சைக்காக எலும்பு மஜ்ஜை தானம் கேட்டு பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.
இதில் என்ன கொடுமை என்றால், Kelly Fan 10 ஆண்டுகளுக்கு முன்பே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முறையான தீவிர சிகிச்சை எடுத்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர். Hodgkin’s Lymphoma எனும் ஒரு வகையான இரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.
பிறகு புது வாழ்க்கையை தொடங்கிய Kelly, தன் மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
ஆனால், இப்போது மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது, எலும்பு மஜ்ஜையில் தொடங்கும் அக்யூட் மைலோயிட் லுகேமியா என்ற தீவிர ரத்த புற்றுநோயுடன் Kelly தற்போது போராடி வருகிறார்.
அவருக்கு தற்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஆனால் அவருக்கு உடனடியாக பொருத்தமான எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர் தேவை. ஆனால் சர்வதேச அளவில் அவருக்கு பொருத்தமான எலும்பு மஜ்ஜை தானம் செய்பவர்கள் யாரும் இதுவரை கிடைக்கவில்லை.
Kelly-யின் உடன்பிறப்புகளின் எலும்பு மஜ்ஜைகளும் முழுமையாக பொருந்தவில்லை. இதனால், பொருத்தமான எலும்பு மஜ்ஜை நன்கொடையாளரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனினும், அவர் விரைவில் சிகிச்சை எடுக்கவில்லை எனில், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
இந்த சூழலில், சிங்கப்பூர் முழுவதும் Kelly குறித்த பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சிங்கை அமைச்சர் கே.சண்முகம் அவர்கள், Kelly-க்கான சிகிச்சை குறித்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த பதிவை முடிந்த அளவு அதிகமாக மற்றவர்களுக்கு பகிருங்கள். உதவி செய்ய விரும்புவோர், Bone Marrow Donor Programme திட்டத்தில் பதிவு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.