சிங்கப்பூரில் சாம்பல் கிரீட கொக்குகளை (grey crowned crane) பார்ப்பது என்பது காணக்கிடைக்காத ஒன்று. இதன் இனம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு குறைந்துவிட்டது. இது கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இனமாகும்.
இந்நிலையில், ஒரு பெரிய, சாம்பல் கிரீட கொக்கினை இரு கைகளிலும் பிடித்தபடி ஒரு பெண் சிங்கப்பூர் தெருவில் ஒய்யாரமாக உலா வரும் வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கொக்கு சிங்கப்பூரில் எப்படி தென்பட்டது என்பதே அதிகாரிகள் உட்பட அனைவரின் குழப்பமாக உள்ளது. இருப்பினும் செலிட்டாரில் உள்ள பண்ணையிலிருந்து இந்த கொக்கும் தப்பித்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
எனினும், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், குடிபோதையில் வாடிக்கையாளரை பாரில் இருந்து வெளியே வந்து டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி அழைத்துச் செல்வது போல அந்தப் பெண் பறவையுடன் தள்ளாடி நடப்பது போல உள்ளது.
அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.