TamilSaaga
VTL

சிங்கப்பூர் வருபவர்களுக்கு.. – ஓர் முக்கிய அறிவிப்பு

VTL Guidelines: இந்தியாவுடனான சிங்கப்பூரின் தடுப்பூசி பயண பாதை (VTL) வரும் நவம்பர் 29 அன்று முதல் தொடங்குகிறது. சென்னை, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தினசரி ஆறு நியமிக்கப்பட்ட விமானங்கள் சிங்கப்பூர் வரவுள்ளன.

இந்நிலையில், இந்த VTL திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை (Guidelines) பயணிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இதில், ஏதேனும் ஒன்று பூர்த்தி ஆகவில்லை என்றாலும் சிங்கப்பூருக்கு பயணிக்க முடியாது. அந்த வழிகாட்டுதல்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்

  • VTL-ன் கீழ் பயணிக்கும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டு, அதற்கான ஆதாரத்தை (digital proof) சமர்ப்பிக்க வேண்டும்.
  • பயணிகள் இரண்டு கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் ஒரு சோதனை செய்திருக்க வேண்டும். பிறகு, சாங்கி விமான நிலையத்திற்கு வரும் போது மற்றொரு சோதனை செய்ய வேண்டும்.
  • சோதனைக்குப் பிறகு, முடிவு எதிர்மறையாக இருப்பது உறுதி செய்யப்படும் வரை பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, ரிசல்ட் வரும் வரை நீங்களே உங்களை தனிமைப்படுத்திக்க வேண்டும்.
  • தடுப்பூசி போட்டிருக்காத 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் VTL-ன் அனைத்து நெறிமுறைகளுக்கும் உட்பட்டு பயணிக்கும் பயணியுடன் வந்திருந்தால், அந்த குழந்தைகள் சிங்கப்பூருக்குள் VTL-ன் கீழ் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பயணிகள் அந்தந்த VTL நாடுகளால் விதிக்கப்பட்ட நுழைவுத் தேவைகளை (Entry Requirements) சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • குறுகிய காலத்திற்கு மட்டும் பயணம் செய்ய விரும்புவோர், சிங்கப்பூர் செல்வதற்கு முன், கோவிட்-19 தொடர்பான மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளுக்காக, மினிமம் கவரேஜாக $30,000-க்கான பயணக் காப்பீட்டை (Travel Insurance) கண்டிப்பாக வாங்க வேண்டும்.
  • அனைத்து பயணிகளும் சிங்கப்பூரில் உள்ள ட்ரேஸ் டுகெதர் (Trace Together app) செயலியைப் பயன்படுத்தி தொடர்புத் தடமறிதலை எளிதாக்க வேண்டும். சிங்கப்பூரை விட்டு வெளியேறிய பிறகு, Trace Together ஆப்ஸ் தகவல்களை 21 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.
  • ஏதேனும் VTL நெறிமுறைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR) தங்கள் டிராவல் ஹிஸ்டரியைப் பொறுத்து ஏழு அல்லது 10-நாள் Stay Home Notice (SHN) வழங்க வேண்டும்.
  • 12 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து பயணிகளும் VTL விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts