TamilSaaga

சிங்கப்பூரில் உயரும் Vaccination சதவீதம்… முதியவர்கள் எத்தனை பேர் தடுப்பூசி பெற்றனர்? – Complete புள்ளி விவரங்கள்

சிங்கப்பூரில் தடுப்பூசி திட்டம் மிக வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை 81% மக்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு உள்ளனர். மேலும் சுமார் 72% மக்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் பெற்றுள்ளனர்.

இந்த விவரங்களில் முதியவர்கள் எவ்வளவு பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

60-69 வயதுடையவர்கள் :
சிங்கப்பூரில் சுமார் 60 முதல் 69 வயதுடைய முதியவர்களில் 87 சதவீதம் பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

சுமார் 91 சதவீத முதியவர்கள் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். மொத்தத்தில் 9 சதவீதத்தினர் மட்டுமே இன்னும் தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

70 வயதுக்கு மேல் :
சிங்கப்பூரில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மொத்த எண்ணிக்கையில் சுமார் 79 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

மேலும், 85 சதவீதம் மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும், 15 சதவீதம் பேர் இன்னமும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாமலும் இருபதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி வரையிலான புள்ளிவிவரங்கள். இதனை நேற்று (ஆகஸ்ட்.10) சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Related posts