சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வரும் TOTO லாட்டரியின் இந்த வருடத்திற்கான முதல் குலுக்கலில் இரண்டு பேர் முதல் பரிசை தட்டி சென்றுள்ளனர். இவர்களுக்கு பரிசாக 9 கோடி ரூபாய் பரிசாக கிடைத்து இருக்கிறது.
சிங்கப்பூரில் லாட்டரி பயன்பாடு என்பது சட்டப்பூர்வமான விஷயம் தான். 4D, singapore sweep மற்றும் TOTO என பல வகையான லாட்டரிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பலருக்கும் இந்த டிக்கெட்களை வாங்கி ஒரு வேளை வெற்றி பெற்று விட்டால் நாமும் கோடீஸ்வரர்களாகி விடலாமே என்ற ஆசையில் தான் இருப்பார்கள். கண்டிப்பாக லாட்டரி ஒரு அதிர்ஷ்டமாக பயன்படுத்தாலாமே தவிர அதிலேயே அடிமையாகி விட வேண்டாம்.
சரி இந்த வருடத்திற்கு முதல் குலுக்கல் திங்கள்கிழமை டிச.2 ந் தேதி நடந்தது. இதில் எப்போதும் போல இல்லாமல் முதல் பரிசை இருவர் தட்டி சென்றுள்ளனர். சிங்கப்பூர் மதிப்பில் $1,429,176 என அறிவிக்கப்பட்டுள்ள தொகை பங்கிட்டு இருவருக்கும் கொடுக்கப்பட இருக்கிறது. க்ரூப் 2ல் இரண்டாம் பரிசினை மூவர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு $100,293 சிங்கப்பூர் டாலர் கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் 62 லட்ச ரூபாயாக மதிப்பிடப்படுகிறது.
இதை தொடர் க்ரூப் 3 என அழைக்கப்படும் மூன்றாம் பரிசினை 98 பேர் வென்றுள்ளனர். இவர்களுக்கு பரிசுத்தொகையாக $2,111 சிங்கப்பூர் டாலர் கிடைத்துள்ளது. 262 பேருக்கு க்ரூப் 4 என அழைக்கப்படும் நான்காம் பரிசு கிடைத்து இருக்கிறது. இவர்களுக்கு பரிசுத்தொகையாக $431 சிங்கப்பூர் டாலர் கிடைத்துள்ளது.
க்ரூப் 5 மற்றும் 6 வது பிரிவில் பரிசுத்தொகையாக $50 மற்றும் $25 சிங்கப்பூர் டாலர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முறையே 5,229 மற்றும் 8,475 நபர்கள் வென்றுள்ளனர். கடைசியாக $10 சிங்கப்பூர் டாலரை 99,647 பேர் வென்றுள்ளனர். எப்போதும் போல் இல்லாமல் இந்த வருடத்தின் இரண்டாம் டிக்கெட் வியாழக்கிழமை நடக்க வேண்டும். ஆனால் இதில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இரண்டாம் குலுக்கல் வெள்ளிக்கிழமை டிச.6ந் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது.
2023ன் முதல் குலுக்கலில் முதல் பரிசினை வென்ற டிக்கெடுக்கள் Anchorvale Rd Branch pools மற்றும் Kwek Lee Eng Agencyல் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழ் சாகாவின் டீம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.