TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரி.. தீபாவளி பரிசாக தனி ஆளாக “16 கோடி” வென்ற தங்க மகன்.. வாழ்க.. வாழ்க!

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்துள்ளது. ஆம்! இதற்கான குலுக்கல் நேற்று (அக்.24) நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நடந்த இதற்கான குலுக்கலில் ஜாக்பாட் பரிசான $2,824,881 சிங்கப்பூர் டாலர் தொகையை ஒருவர் வென்றுள்ளார்.

சில சமயங்களில், முதல் பரிசு இருவருக்கு விழும். அப்போது, இருவரும் அதனை பகிர்ந்து எடுத்துக் கொள்வார்கள். எனினும், இந்த முறை Group 1 எனப்படும் ஜாக்பாட் பரிசான $2,824,881 சிங்கப்பூர் டாலர் தொகை ஒருவருக்கும் மட்டும் விழுந்துள்ளது.

Group 1 Winning Numbers

71117214143

இது இந்திய மதிப்பில் ஏறக்குறைய 16 கோடி ரூபாய்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரிய அருமையான வாய்ப்பு.. முன்பணம் வேண்டியதில்லை.. 10th படித்திருந்தாலே போதும்!

இதையடுத்து Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான $51,446 சிங்கப்பூர் டாலர் தொகையை ஏழு பேர் வென்றுள்ளனர். இந்திய மதிப்பில், ஏறக்குறைய 30 லட்சம் ரூபாயை எடுத்துச் செல்கின்றனர்.

Group 2 எனப்படும் மூன்றாவது பரிசான $1,191 சிங்கப்பூர் டாலர் தொகையை 208 பேர் வென்றுள்ளனர்.

அடுத்த குலுக்கல் வரும் அக்.27 அன்று நடைபெற உள்ளது. இப்போதைக்கு அதன் ஜாக்பாட் பரிசாக $1,000,000 சிங்கப்பூர் டாலர் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts