TamilSaaga

“சிங்கப்பூர் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைன் ஸ்டேஜ் 2” – இனிதே நேற்று தொடங்கியது புதிய பயணம்

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைன் ஸ்டேஜ் 2 – (TEL2). மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று சிங்கப்பூரில் இது திறக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பயணத்தை மக்கள் பலர் நேற்று முதல் பயன்படுத்த தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைன் ஸ்டேஜ் 2 – (TEL2) 6 நிலையங்களுடன் 13 கிமீ நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பிரிங்லீட், லென்டர், மேஃப்ளவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன் மற்றும் கால்டிகாட் இவை தான் நேற்று திறக்கப்பட்ட 6 புதிய நிலையங்கள். இந்த 6 வழித்தடங்கள் மூலம் சுமார் 1,00,000 குடும்பங்கள் இப்போது TEL நிலையத்திலிருந்து 10 நிமிட நடைப்பயணத்திற்குள் தாம்சன் பகுதி உட்பட முன்னர் நேரடியாக ரயில் பாதை சேவை செயல்படுத்தப்படாத இடங்களை அடையாளம்.

நேற்று முதல் இந்த பயண வழிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வூட்லேண்ட்ஸ் நோர்த் முதல் கால்ட்காட் வரையிலான TEL1 மற்றும் TEL2 பிரிவுகளில், கூட்டம் அதிகம் உள்ள PEAK நேரத்தில் ரயில்கள் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும் மற்ற நேரங்களில் ஒன்பது நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

TEL தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அது சிங்கப்பூரின் மெட்ரோ நெட்வொர்க்கில் 32 நிலையங்களைச் சேர்த்து சுமார் 43 கிமீ நீளம் கொண்டதாக திகழ்கின்றது. மேலும் இந்த தடத்தை தினமும் 5,00,000 பயணிகள் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts