சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டு வரும் லாட்டரியில் இந்த வார வெற்றியாளருக்கு ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்து இருக்கிறதாம்.
சிங்கப்பூரில் பல வகையான லாட்டரி சீட்டுக்கள் விற்பனையில் இருந்து வருகிறது. இதில் மிகவும் பிரபலமான 4D, TOTO, singapore sweep ஆகியவை தான். இதில் 4D வாரத்துக்கு மூன்று முறையும், TOTO வாரத்துக்கு இரண்டுமுறையும் குலுக்கப்படும்.
Singapore sweep மாதம் ஒருமுறை முதல் புதன்கிழமைகளில் குலுக்கப்படும். இதன் பரிசுத்தொகையும் $2,300,000 என ஒரே அளவில் தான் எல்லா குலுக்கலிலும் இருக்கும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடியாக கணக்கிடப்படுகிறது. இரண்டாவது பரிசாக $500,000 கொடுக்கப்படுகிறது.
இந்த மாதத்தின் முதல் குலுக்கல் நேற்று நடந்தது. இதில் சிங்கப்பூரை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த நபர் பரிசை claim செய்வதில் ரொம்ப தாமதம் ஏற்பட்டதாம். அதுகுறித்து அவர் தரப்பில் விசாரிக்கும் போது எனக்கு பெருவாரியான நேரங்களில் லக்கே இருப்பது இல்லை. இந்த முறையும் அப்படி தான் நினைத்து வாங்கினேன். அதனால் இந்த லாட்டரியை எங்கு வைத்தேன் எனத் தெரியவில்லை.
திடீரென எனக்கு பரிசு விழுந்தது தெரிந்ததும் வீடு முழுவதும் இந்த லாட்டரியை தேடினேன். அப்போது எனது வீட்டு குப்பை தொட்டியில் அதிர்ஷ்டவசமாக இதை கண்டிப்பிடித்ததாக கூறியிருக்கிறார்.