TamilSaaga

புருனேவிற்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி – சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

சிங்கப்பூர் அரசு தற்போதைய தொற்றுநோயை சமாளிக்க, புருனேயுடனான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் மாடர்னா பெருந்தொற்று தடுப்பூசியின் 1,00,000 டோஸ் அளவுகளை வழங்கியுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் (எம்எஃப்ஏ) இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பங்களிப்பு இரு அரசாங்கங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது. மற்றும் இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பரஸ்பர ஆதரவை விரிவுபடுத்துகிறது என்று MFA (வெளியுறவு அமைச்சகம்) கூறியது.

இந்த வார தொடக்கத்தில், புருனே மற்றும் ஜெர்மனியுடன் தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகளை தொடங்குவதாக சிங்கப்பூர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பயண பாதைகளின் கீழ், ஜெர்மனி அல்லது புருனேயிலிருந்து புறப்படும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தங்குமிட அறிவிப்பை (தனிமைப்படுத்துதல்) வழங்காமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

எவ்வாறாயினும், அவர்கள் பல பெருந்தொற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts