TamilSaaga

உதவிகளை அடுக்கும் சிங்கப்பூர் – இந்தோனேஷியா செல்லும் 11,000 உயிர்வாயுக் கருவிகள்

இந்தோனேஷியாவில் தற்போது கிருமி பரவல் அதிகமாக இருக்கும் காரணத்தினால் சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு தனது முதல் கட்ட அவசரகால மருத்துவ சாதனங்களை இந்தோனேசிய அனுப்பிய நிலையில் நேற்று இந்தோனேசியாவுக்கு 2-வது கட்டமாக அவசரகால மருந்துகளை அனுப்பி உள்ளது சிங்கப்பூர்.

இந்த பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூர் கடற்படைக் கப்பல் மூலம் நேற்று காலை சாங்கி கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்வாய்வுக்கலன்கள் உள்ளிட்ட இதர மருத்துவ சாதனங்கள் இந்த முறை அனுப்பப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்றமுறை இந்த பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தோனேசிய அரசுடன் சிங்கப்பூர் அரசு கைகோர்த்து நிற்கும் என்று MFA (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செயற்கை சுவாசமின்றி இந்தோனேசியாவில் தவிக்கும் மக்களை காப்பாற்ற சிங்கப்பூர் அரசு 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்வாயு கருவிகளை தற்போது இந்தோனேஷியா அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக தற்போது 1500 உயிர்வாயுக்கருவிகளை சிங்கப்பூர் இந்தோனேசியாவிற்கு அனுப்பியது

Related posts