சிங்கப்பூருக்கு குடும்பத்தை விட்டு இங்கு கஷ்டப்படுவது சம்பளத்திற்கு தானே. இங்கிருக்கும் ஊழியர்கள் அனைவருமே தினக்கூலியாகவே கருதப்படுவர். அவர்கள் தினசரி சம்பளத்துடன் ஓவர் டைம்மிற்கான தொகை குறித்து நீங்களே கணக்கிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கம்பெனியிலும் மாதத்தின் தொடக்கத்தில் சைன் கார்டு கொடுக்கப்படும். அதில் உங்கள் பெயர் மற்ற தகவல்கள் இருக்கும். அது உங்களது ரிஜிஸ்டராக பார்க்கப்படும். அதனால் அதில் நீங்க வேலை செய்த நாள், ஓடி குறித்த தகவல்கள் சரியாக பதியப்பட்டு இருக்கிறதாக என தினசரி செக் செய்து கொள்ளுங்கள்.
சம்பளத்தில் பெரிய மாறுப்பாடு இருக்காது ஒரு நாளைக்கான சம்பளத்தை எத்தனை நாள் வேலை பார்த்து இருக்கிறோம் எனக் கணக்கிட்டால் தெரிந்து விடும். இதில் குழப்பம் நடப்பதே ஓவர் டைமில் தான். ஒரு சில கம்பெனிகளில் மணி நேரத்துக்கு 1.5 சம்பளமும், சில கம்பெனிகள் 2 மடங்கு சம்பளமும் கொடுப்பார்கள்.
வொர்க் பெர்மிட்டில் உங்களுக்கான சம்பளத் தகவல்கள் மட்டுமே இருக்கும். உங்களுக்கு $20 சிங்கப்பூர் டாலர் சம்பளம் என வைத்துக்கொள்ளலாம். விடுமுறை நாளுக்கு சம்பளம் கொடுக்கப்படாது. வேலைக்கு போகும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும். இப்போ $20ஐ 30 நாட்களுடன் பெருக்கி கொள்ளுங்கள். மாதம் $600 சிங்கப்பூர் டாலர் சம்பளம் வரும்.
ஒரு மணி நேரத்துக்கு உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை கணக்கிடுங்கள். $20 டாலரை 8( ஒரு நாள் வேலை நேரம்)ல் வகுத்து பார்த்தால் ஒரு மணி நேரத்துக்கு $2.5 டாலர் சம்பளமாக கொடுக்கப்படும். பெரும்பாலான கம்பெனிகளில் 1.5 மடங்கு தான் ஓவர் டைம் சம்பளமாக கொடுக்கப்பதால் அதை வைத்து பார்க்கும் போது மணி நேரத்துக்கு $3.8 ஓவர் டைம் சம்பளமாக தருவார்கள். இரண்டு மணி நேரம் கட்டாயம் ஓவர் டைம் பார்க்க வேண்டும். அதற்கு மீறியது உங்கள் விருப்பம் தான்.
உதாரணமாக, 75மணி நேரம் ஓவர் டைம் பார்த்திருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் அதனுடன் $3.8(1.5 மடங்கு ஓவர் டைம் சம்பளம்)ஐ பெருக்குங்கள். $285 உங்களின் ஒரு மாதத்திற்கான ஓவர் டைம் சம்பளம். இதனுடன் நம் மாதம் சம்பளமான $600ஐ கூட்டுங்கள். மொத்தமான $885 சிங்கப்பூர் டாலர் உங்களுக்கு மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
அதாவது இந்திய மதிப்பில் 53 ஆயிரம் ரூபாயாகும். இதில் மாற்றம் இருந்தால் உங்க கம்பெனியின் ஹெச்.ஆரை தொடர்பு கொண்டு கேளுங்கள். எதுவும் பிடித்தம் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் அது ரொம்ப முக்கியம். இந்த சம்பளத்தில் கை செலவு, சாப்பாட்டு செலவு, மொபைலுக்கு போடப்படும் காசு போக மீதியை தாராளமாக உங்க வீட்டுக்கு அனுப்பலாம்.