அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற ஸ்டெம் கல்வியை ஊக்குவிக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட குழுவான ஃபர்ஸ்ட் குளோபல் ஏற்பாடு செய்துள்ள “ஒலிம்பிக்-பாணி” போட்டியில் பங்கேற்க சுமார் 190 நாடுகள் தலா ஒரு குழுவை சிங்கப்பூருக்கு அனுப்ப இருக்கிறது. செல்ஃப் பேலன்ஸிங் செக்வே ஸ்கூட்டரின் கண்டுபிடிப்பாளரான ஃபர்ஸ்ட் குளோபல் நிறுவனர் டீன் கமென், புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூரின் கவனம் செலுத்துவதாக கூறி இருக்கிறார். இந்த ஆண்டு போட்டியின் தீம் Clean energy எனக் கூறப்பட்டுள்ளது.
பூமியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுத்தமான மற்றும் சமமான எனர்ஜி எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களில் அதிகரித்த முதலீடுகளின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் எடுத்துக்காட்டுவதாக காமன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் தூதர் அசோக் மிர்பூரி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய போட்டியின் தீம்கள் வளங்கள் இல்லாத சிறிய நாடான சிங்கப்பூரில் எதிரொலிக்கிறது என்றார்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல நினைக்கும் ஊழியரா நீங்க… அப்போ இந்த தகவலை மிஸ் செய்யாமல் தெரிஞ்சிக்கோங்க.. வாழ்க்கையே செம எளிதாக்கிடும்!
2022 அக்டோபரில் சிங்கப்பூர் தனது national hydrogen strategyஐ அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், க்ளீன் எனர்ஜியின் போட்டியின் கவனம் இருப்பதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் 2050ஆம் ஆண்டளவில் குறைந்த கார்பன் ஹைட்ரஜனில் இருந்து தனது எனர்ஜி தேவைகளில் பாதியை உற்பத்தி செய்ய முயன்று வருகிறது. சிங்கப்பூர் பல விஷயங்களுக்கான சோதனைக் களமாகவும் உள்ளது. மாணவர்களில் பலர் சிங்கப்பூருக்கு வருவதால், அவர்கள் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்வார்கள். சிங்கப்பூருக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உரித்தான புதிய யோசனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் சோதிப்பார்கள் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
2017 முதல் ஒவ்வொரு உலகளாவில் நடந்த போட்டிகளில் ஆங்கிலோ-சீனப் பள்ளி குழு சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. வருடாந்திர போட்டியின் முந்தைய பதிப்புகள் துபாய், ஜெனிவா, மெக்சிகோ சிட்டி மற்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த பயணிக்கு நெஞ்சுவலி… 4 மணி நேர மரண போராட்டம்.. உயிரைக் காப்பாற்றிய “சென்னை” – 317 சக பயணிகள் காட்டிய “பேரன்பு” !’
போட்டியிட, ஒவ்வொரு நாடும் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட மூன்று முதல் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் ஒரு நிலையான பாகங்கள் கொண்ட ஒரு ரோபோவை வடிவமைத்து உருவாக்க வேண்டும். ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கும், எனர்ஜியை சேமிப்பதற்கும், கொண்டு செல்வதற்கும் மற்றும் மாற்றுவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கு உருவகப்படுத்தப்பட்ட உலகில் தங்கள் ரோபோவை வழிநடத்த குழுக்கள் செயல்பட வேண்டும் என்பதே இந்த போட்டியின் நோக்கமாக கருதப்படுகிறது.
அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் இந்த போட்டியானது, அமெரிக்க செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச் மூலம் முதன்மையாக நிதியுதவி செய்கிறது. இந்த தொகையை ஃபர்ஸ்ட் குளோபலுக்கு $13.3 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் நன்கொடையாக அளித்துள்ளது. மேலும், இது சிங்கப்பூர் அரசு, அமெரிக்க எரிசக்தி துறை மற்றும் பிறவற்றால் நிதியுதவி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.