சிங்கப்பூரில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 13) நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் 2,304 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 14 பேர் பெருந்தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இறந்தவர்கள் 61 மற்றும் 94 வயதுக்கு இடைப்பட்டவர்கள், அவர்கள் அனைவருக்கும், ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன. இந்த மருத்துவ நிலைமைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிடவில்லை. இதுவரை சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு 576 பேர் இறந்துள்ளதனார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை தீவில் பதிவான 3,099 நோய்த்தொற்றுகளிலிருந்து சனிக்கிழமை பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று சனிக்கிழமையன்று வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 0.98 ஆக இருந்தது, இது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 1.04 ஐ விடக் குறைவு. இது கடந்த வாரத்திற்கு முந்தைய வாரத்தில் சமூக வழக்குகளின் விகிதத்தைக் குறிக்கிறது.
கடந்த சனிக்கிழமை பதிவான புதிய வழக்குகளில், 2,299 நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் பரவியுள்ளன. இதில் சமூகத்தில் 2,179 வழக்குகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தங்குமிடங்களில் 120 நோய்த்தொற்றுகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு பெருந்தொற்று இருப்பது உறுதியானது. சிங்கப்பூரில் பெருந்தொற்று பரவியதில் இருந்து இதுவரை 2,35,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,574 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 253 நோயாளிகளுக்கு பொது வார்டுகளில் உள்ளார்கள். 51 வழக்குகள் நிலையற்ற நிலையில் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இருந்துவருகின்றனர். மேலும் 72 பேர் மோசமாக நோய்வாய்ப்பட்டு ICUவில் உள்ளனர். அதே நேரத்தில் கடந்த நாளில் மொத்தம் 2,539 வழக்குகள் குணமடைந்துள்ளனர். அவர்களில் 389 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்.