TamilSaaga

சிங்கப்பூரில் அரிய வகை தவளை கண்டுபிடிப்பு – தமிழ் வம்சாவளியை சேர்ந்தவரின் பெயரை சூட்டி பெருமைப்படுத்திய சிங்கை

சிங்கப்பூரில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு தவளை இனத்திற்கு சிங்கப்பூரின் பிரபல வனவிலங்கு ஆலோசகர் மற்றும் பாதுகாவலரான மறைந்த திரு. சுப்பராஜ் ராஜதுரையின் நினைவாகப் அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

“Micryletta subaraji” என்று பெரியரிட்டுள்ள இந்த தவளை சிங்கப்பூரில் மட்டுமே இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய தவளை இனம் குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), ஹெர்பெட்டாலஜிகல் சொசைட்டி ஆஃப் சிங்கப்பூர் (HSS) மற்றும் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, கடந்த ஜூன் 29ம் அன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் Work Pass வைத்திருப்பவர்களுக்கு புதிய Update.. இன்று (ஜூலை 1) முதல் சிங்கையில் அமலாகும் சில “புதிய விதிகள்” – ஒரு Complete Report

உலகளவில், கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மூன்று Micryletta இன தவளைகள் மட்டுமே கண்டறியப்பட்டன. ஆனால் 2018 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில், மூலக்கூறு தரவுகளைப் பயன்படுத்தி கூடுதலாக ஒன்பது இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

“சிங்கப்பூருக்காக உழைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்..” பெருமைப்படுத்திய சிங்கை – பிரத்தியேகமாக திறக்கப்பட காட்சியகம்

இந்நிலையில் சிங்கப்பூரில் மட்டுமே காணப்படும் இந்த வகை Micryletta தவளை இனத்திற்கு சிங்கப்பூரும் புகழ்பெற்ற வனவிலங்கு ஆலோசகரும் பாதுகாவலருமான மறைந்த சுப்பராஜ் ராஜதுரையின் நினைவாக இந்த புதிய இனத்திற்கு “Micryletta subaraji” என்று பெயரிடப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts