TamilSaaga

சிங்கப்பூரில் உயர்ந்த தமிழனின் வீரம்.. பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவரை சீறிப்பாய்ந்து பிடித்த தமிழர் – காவல்துறை சிறப்பு விருது – சல்யூட்!

குற்றங்களை தவிர்க்க எவ்வளவு தான் கடுமையான சட்டங்களை இயற்றினாலும், மக்களின் பங்களிப்பும் அதில் மிக மிக அவசியமாகிறது. கண்முன்னே குற்றம் நடந்தால், குறைந்தபட்சம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் தைரியம் கூட பலருக்கு இருப்பதில்லை. ‘நமக்கு ஏன் வம்பு’ என்பதே சராசரி மக்களின் மனநிலையாக உள்ளது.

இதற்கு மக்களை மட்டும் குறை சொல்ல முடியாது. எந்தவொரு சம்பவத்தாலும், குருவிக்கூடு போல பொத்தி பொத்தி வளர்க்கப்படும் தன் குடும்பத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று நினைப்பது இயற்கை தான். அதேசமயம், சிலர் குடும்பமே இருந்தாலும், மக்கள் பணியில், சமூக பணியில் ஈடுபடும் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

எங்கு தவறு நடந்தாலும், அதை தட்டிக் கேட்கும் தைரியமும், துணிச்சலும் அவர்களிடம் இருக்கும். பல நாடுகள் இப்படி சமூக அக்கறை கொண்ட குடிமக்களுக்கு அவ்வப்போது விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றன. அந்த வகையில், சுயநலமின்றி பொதுநலத்துடன் சிங்கப்பூரில் சேவை செய்த 6 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 3 அமைப்புகளுக்கும் ஒரு ஊழியருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க – அன்று குடும்பத்திற்காக சிங்கப்பூரில் வேலைக்குச் சென்ற மீனாட்சி.. வெளியே சொல்ல முடியாத மோசமான அனுபவம் – இன்று “யூடியூப் சேனல்” மூலம் லட்சங்களில் கொட்டும் வருமானம்

முதல் சம்பவமாக, கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு, உலு பாண்டன் பார்க் கனெக்டரில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக மானபங்கம் செய்ய முயன்ற ஒருவரை பிடிக்க காவல்துறையுடன் இணைந்து உதவியதற்காக திரு வினோத் ராஜேந்திரன் மற்றும் திருமதி ரமிசா பானு அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

அதேபோல், மற்றொரு சம்பவத்தில், 72 காமன்வெல்த் அவென்யூவில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்க உதவிய திரு. அழகர் ரவிக்கும், ஒரு கடையில் நடந்த திருட்டைக் கண்டுபிடிக்கக் காவல்துறைக்கு உதவிய திரு. முகமது ஷுபானுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், மற்றொரு சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டு, வன்முறையில் ஈடுபட்ட நபரை கட்டுப்படுத்த உதவிய திரு. இங் ஷெங் சாவ் பெனடிக்ட் என்பவருக்கு விருது வழங்கப்பட்டது.

அதேபோல், மற்றொரு சம்பவத்தில், ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட ஒரு நபரைக் கண்டுபிடிக்க உதவிய திரு. லிம் வெய் ஹாவ் என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts