TamilSaaga

சிங்கப்பூர் மக்களே உஷார்!! செல்போன் மூலம் கடந்த மாதம் மட்டும் 20,000 வெள்ளிகளை இழந்த மக்கள்.. காவல்துறை எச்சரிக்கை!!

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சம் S$20,000 (US$14,000) இழந்துள்ளதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) புதன்கிழமை (ஜூன் 28) தெரிவித்துள்ளது.

மொபைல் போன் மூலம் நடந்த ஏமாற்று வேலையில் 12 பேர் சென்ற மாதம் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொபைல் போனிற்கு சிங்டெல் அனுப்பியதாகக் கூறப்படும் போலி எஸ்எம்எஸ் மற்றும் மோசடியான URL இணைப்பும் சேர்ந்து அனுப்பப்படும்.

குறிப்பிட்ட ஆஃபரை அனுப்புவது போல் அனுப்பி, காலாவதி ஆகும் முன் விரைவில் கீழ்கண்டலின் திணை கிளிக் பண்ணுங்கள் என்ற எஸ் எம் எஸ் அனுப்பி அவர்களின் ஆசையை தூண்டுகின்றனர். இந்த இணைப்பு பாதிக்கப்பட்டவரை ஒரு போலி சிங்டெல் தளத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு ஆப்பிள் வாட்ச் அல்லது ஆப்பிள் ஏர்போட்கள் போன்ற வெகுமதி பொருட்களை தேர்ந்தெடுக்குமாறு சொல்லும்.

ரிவார்டு ரிடீம் செய்ய, Singtel புள்ளிகள் பெயரளவு தொகையுடன் டாப்-அப் செய்யப்பட வேண்டும் – உதாரணமாக S$1.பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்துவதற்காக, போலி சிங்டெல் தளத்தில் தங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களின் மூலம் உங்களது பணமானது உங்களுக்கே தெரியாமல் கொள்ளையடிக்கப்படும்.

வங்கிக் கணக்குகளுக்கான மல்டிஃபாக்டர் அங்கீகாரம், இணைய வங்கி பரிவர்த்தனைகளில் பரிவர்த்தனை வரம்புகளை நிர்ணயித்தல் மற்றும் ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பயன்படுத்துதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பொது உறுப்பினர்கள் சந்தேகத்திற்குரிய URL இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும், அதே நேரத்தில் மோசடியான பரிவர்த்தனைகள் ஏற்பட்டால் வங்கிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts